ஓரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது..
மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது,
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்..
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்!!
ஓ! ஓ! ஓ!
கருவாசல் விட்ட வந்த நாள் தொட்டு,
ஓ! ஓ! ஓ!
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓ! ஓ! ஓ!
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓ! ஓ! ஓ!
கண் மூடிக்கொண்டால்..
போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்.
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எறிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்..
ஓ! ஓ! ஓ!
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓ! ஓ! ஓ!
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓ! ஓ! ஓ!
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஓ! ஓ! ஓ!
அந்த கடவுளை கண்டால்...
அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் எனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம்..
ஓ! ஓ! ஓ!
பல முகங்கள் வேண்டும், சரி மாட்டிக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
பல திருப்பம் தெரியும் , அதில் திரும்பிக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
கதை முடியும் போக்கில், அதை முடித்துக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
மறுபிறவி வேண்டுமா??