தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா
தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்
.......... நிலா காய்கிறது .........
அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்
.......... நிலா காய்கிறது .........
படம் : இந்திரா இசை : ஏ.ஆர். ரஹ்மான் பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன் வரிகள் : வைரமுத்து
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேணில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன் மீது பந்தாடும் (நலம் வாழ..)
மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம் இலக்கணம் சில நேரம் தவறாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம் விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம் கிளியே... (நலம் வாழ..)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது கடலினில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் மரபானது நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்.. (நலம் வாழ..)
படம்: மறுபடியும் இசை: இளையராஜா பாடியவர்: SP பாலசுப்ரமணியம் பாடலாசிரியர்: வாலி
ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து மேடையே வையகம் ஒரு மேடையே வேஷமே அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான் காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான் ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
(எல்லோரும்)
கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
(ஹே அச்சம்)
அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
வாடி இளையசெல்லியே...வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா
(ஹே அச்சம்)
லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)
கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்