ஞாயிறு, 9 ஜனவரி, 2011
கவிதைக்கு பொருள்
கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?
இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!