சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?
அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே
இதுவரை தொடர்ந்த பழங்கதை எல்லாம் புரண்டு போனதே தோழா
வெற்றியின் விதைகள் விழியில் தெரித்ததே தொல்விகள் இல்லை தோழா
சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?
அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே
ஆழியும் புலமும் நம் பெயர் சொல்லும் அடுத்தவன் ஆழ உரிமை இல்லை
நிழலுக்கும் கூட ஆயுதம் தந்து உரிமையை வெல்லுமே எங்கள் படை
யார்க்கும் இளைத்தவர் இல்லை இங்கே பூனையும் கோழை இல்லை
ஆண் பெண் படையணி நாங்கள் எமை வென்றிட எவனும் இல்லை
வெடிப்புற கிளர்ந்திடும் வீரம் எங்கள் மண்ணின் வாசம் இது
உரிமையின் முழக்கம் கேட்டே எல்லா திசைகளும் நொறுங்கியது
சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?
அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே
சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!