சனி, 5 பிப்ரவரி, 2011
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை
படம்: முரடன் முத்து
பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்
இசை: ரி ஜி லிங்கப்பா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை
நல்ல உள்ளமில்லை.. என்றும்
பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணுமில்லை
இரு கண்ணுமில்லை..
(பொன்னாசை)
பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா
பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா..
முல்லை பூ வேண்டுமா
கொல்லவரும் வேங்கைக்கு மான் வேண்டுமா..
புள்ளி மான் வேண்டுமா
குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா
குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா..
நல்ல துணையாகுமா
சொல்லக்கூடாத ஆசை நெஞ்சில் வரலாகுமா..
அது முறையாகுமா
(பொன்னாசை)
வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா
வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா..
என்றும் ஒன்றல்லவா
மானத்தில் மங்கையர்கள் மானல்லவா..
கவரி மானல்லவா
பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா
பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா..
பெண்மை உறவாடுமா
தட்டிப்பறித்தே சென்றாலும் அது உயிர்வாழுமா..
இன்பம் பயிராகுமா
(பொன்னாசை)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!