மறுபடியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறுபடியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
நலம் வாழ என்னாளும்
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும் (நலம் வாழ..)
மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம் கிளியே... (நலம் வாழ..)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்.. (நலம் வாழ..)
படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி
குறிப்புகள் :
அரவிந்தசுவாமி,
மறுபடியும்,
வாலி,
video
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
எல்லோரும் சொல்லும் பாட்டு
ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே
வையகம் ஒரு மேடையே
வேஷமே
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
(எல்லோரும்)
கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
(எல்லோரும்)
குறிப்புகள் :
அரவிந்தசுவாமி,
பாடல் இயற்றியவரின் பெயர்?,
மறுபடியும்,
video
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)