Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
ஆலங்குடி சோமு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலங்குடி சோமு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

இரவு வரும் பகலும் வரும்

படம்: இரவும் பகலும்.
பாடியவர்: டி.எம்.எஸ்.
வரிகள்: கண்ணதாஸன்.
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும்
பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

விழி இரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்று தான் பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான்
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்று தான் தெய்வம் ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான் உலகம் ஒன்று தான் 

This feature is powered by Dishant.com - Home of Indian Music

வியாழன், 4 பிப்ரவரி, 2010

ஆண்டவன் உலகத்தின் முதலாளி..

பாடல் :ஆலங்குடி சோமு
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்
இசை :கே.வி.மகாதேவன்
திரைப்படம்: தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும் அதில்
நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் அரும்பும்
வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர்
வருவார் போவார் பூமியிலே
வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர்
வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த
வரிசையில் முதல்வன் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
Related Posts Plugin for WordPress, Blogger...