Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
சந்திரோதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திரோதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

காசிக்கு போகும் சந்நியாசி

திரைப்படம்:சந்திரோதயம்
பாடியவர்கள்:சௌந்தரராஜன், கோவிந்தராஜன்
இயற்றியவர்:வாலி
இசையமைத்தவர்கள்:எம்.எஸ்.விஸ்வநாதன்

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்கு போகும் பரதேசி...
கங்கைக்கு போகும் பரதேசி
நீ நேத்துவரையிலும் சுகவாசி

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
பட்டது போதும் பெண்ணாலே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும்
சிவ சிவ சிவனே
சிவ சிவ சிவனே
ஆ... சிவனே ஆ...
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி

அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
தலைஅணை மந்திரம் மூளையை தடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்

பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்

காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை

சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
அவள் துணையினை பிரிவது முறையோ
பகைதான் வளரும்
பகையே அன்பாய் மலரும்
பிரிந்தவர் இணைந்திட படுமோ
மணந்தவர் பிரிந்திட தகுமோ
இல்லறம் நல்லறமே

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

புதியதோர் உலகம் செய்வோம்


திரைப்படம்:சந்திரோதயம்

இசையமைத்தவர்கள்:எம்.எஸ்.விஸ்வநாதன்

புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய)

பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய)

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

புத்தன் ,இயேசு .....



புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )

திரைப்படம்:சந்திரோதயம்
பாடியவர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர்:வாலி
இசையமைத்தவர்கள்:எம்.எஸ்.விஸ்வநாதன்
Related Posts Plugin for WordPress, Blogger...