Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
தூங்காதே தம்பி தூங்காதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூங்காதே தம்பி தூங்காதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 பிப்ரவரி, 2011

நானாக நான் இல்லை தாயே



நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

கீழ் வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீதானே நீர் வார்த்த கார் மேகம்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோயில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேறில்லை

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே


Related Posts Plugin for WordPress, Blogger...