Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
பணக்கார குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணக்கார குடும்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 பிப்ரவரி, 2011

பல்லாக்கு வாங்க



திரைப்படம்:பணக்கார குடும்பம்.
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன்

பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக


மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
அதை மண் மீது போட்டுவிட்டேன்
வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக

மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வதுமட்டும்
என் வசமில்லை..என் வசமில்லை .............பல்லாக்கு.............

கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம்..வாழ்வது பாவம் ...........பல்லாக்கு..................

ஒன்று எங்கள் ஜாதியே

திரைப்படம்:பணக்கார குடும்பம்.
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி


ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும் (2)
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே (2)


ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
(ஒன்று )

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
(ஒன்று )
Related Posts Plugin for WordPress, Blogger...