Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

வீடு மனைவி மக்கள்

படம்: வீடு மனைவி மக்கள்
பாடியவர்: பாலு
இசை: சங்கர் கனேஷ்
இயக்குநர்: விசு


வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முறிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்

ஆயிரம் காலத்து பயிரொன்று இன்று
அறுவடை ஆனது
விதைத்தவன் வாழ்க்கை கண்ணீரில் நீராடுது
உதிரத்தில் பிறந்த குருவிகள் எல்லாம்
உறவை மறந்தது
சொந்த என்ற வீட்டில் கடல் மீது மழையானது
ஓவியம் வாங்கி வந்தாள் கண்களை காணவில்லை
தேரொன்று வாங்கி வந்தான் பாதையை காணவில்லை
பூஜைகள் செய்ய வந்தான் கோவிலை காணவில்லை

வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள்

கூறைக்கு வாங்கிய மூங்கிலில்
இன்று கொள்ளியா வைப்பது
பொட்டு மட்டும் வைத்தேன்
வேறென்ன நீ கண்டது
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
வாழ்க்கை தான் போனது
ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது
கூடு ஒன்று முடியும் முன்னே குருவி பறந்ததடா
குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா
பல்லவி தொடங்குமுன்னே உன் சரணம் முடிந்ததடா

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முறிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள்


     Get this widget |     Track details  |         eSnips Social DNA   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...