செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
தாயின் மணிக்கொடி
படம்: ஜெய்ஹிந்த்
பாடல்: தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றேன்றோ
தேகம் பலவாகும்
நம் இரத்தம் ஒன்றல்லோ
பாசைகள் பலவன்றோ
தேசம் ஒன்றேன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
புண்ணிய தேசமடா
வால்கள் கொண்டு வந்தால்
தலையை வாங்கிடும் தேசமடா
எங்கள் இரத்தம்
எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்த எங்கள் ஸ்ரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே
தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தி இருந்தால் தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கயிறு கொண்டு
நீ ஈடுபிடித்து விடு
சரியா இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய இரத்தம் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய இந்தியா
சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!