என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனும் மம்மின்னு சொல்லுறான்
(என்னம்மா..)
சந்தன பூமி தந்தகம் ஆச்சு
காத்துக்கு இப்போ திணறுது மூச்சு
மரம் இல்லா ஊருல மழை எங்க பெய்யுது
குளத்துலத்தான் இப்போ கிரிக்கெட்டு நடக்குது
அட விவசாயம் செய்யுன்னா வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயிதான் ஒட்டகம் மெய்க்கிறான்
(என்னம்மா..)
ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
கோட்டையில் கொடியெல்லாம் கிழியாம பறக்குது
குமரிப்பொண்ணு துணி கிழிஞ்சுதான் தொங்குது
நத்தைக்கு கூட முதுகுல வீடு
நடைப்பாதை தானே ஏழைக்கு கூடு
அட சாமிக்கு வளைகையில மனசார கும்பிட்டோம்
சாக்கடை அள்ளுற கைகளை விட்டுட்டோம்
(என்னம்மா..)
படம்: தம்பி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், மாணிக்க விநாயகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!