அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே
(அழகு...)
சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது?
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது?
அன்பு தான் தியாகமே
அடைமை தான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே
(அழகு...)
பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே
(அழகு...)
படம்: பவித்ரா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: சித்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!