Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

திங்கள், 14 பிப்ரவரி, 2011

போர்க்களம் அங்கே பூவில்



போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே
காதலின் போரிலே கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுதிங்கே
(போர்க்களம்..)

உன்னை எங்கு பிரிகிறேன்
உனக்குள் தானே வாழ்கிறேன்
அன்பில் உன்னை அளக்கிறேன்
அணிச்சை செயலாய் நினைக்கிறேன்
(உன்னை..)
நீயும் சொன்ன சொல்லை நம்பி
இன்னும் உலகில் இருக்கிறேன்
உனது முகமும் அசையும் திசையில்
எனது உதயம் பார்க்கிறேன்
உன்னிலே என்னை நான் தேடித் தேடி வருகிறேன்
(போர்க்களம்..)

பேச மறந்து சிரிக்கிறேன்
பிரிந்தும் உயிராய் இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டாய் இருக்கிறேன்
உனக்குக்ப் பிடித்த உலகம் வாங்கி
உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்
இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன்
(போர்க்களம்..)

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கோபிகா பூர்ணிமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...