பெண்:
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த
இளந்தென்றலே
வளர் பொதிகை மலைத்தோன்றி - மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்:
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்து விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த
இளந்தென்றலே
வளர் பொதிகை மலைத்தோன்றி - மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானைப்படை கொண்டு சேனை பலவென்று
ஆளப் பிறந்தாயடா - புவி
ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங் கொண்டு இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங் கொண்டு
இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா
பெண்:
தங்க கடியாரம் வைரமணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
ஆண்:
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த
இளந்தென்றலே
வளர் பொதிகை மலைத்தோன்றி - மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
பெண்:
சிறகில் எனைமூடி அருமை மகள் போலே
வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா?
ஆண்:
கண்ணின் மணிபோல மணியில் நிழல்போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல்வானம் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப் பிரிக்க முடியாதடா
படம்: பாசமலர் - வருடம் 1961
இசை: திருவாளர்கள். M.S. விஸ்வநாதன் - P. ராமமூர்த்தி
பாடியவர்கள்: T.M.S & P.சுசீலா
பாடல்: கவியரசர்
நடிப்பு: நடிகர் திலகம். சிவாஜி கணேசன் &
நடிகையர் திலகம் திருமதி. சாவித்திரி
சனி, 13 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!