எத்தனை செல்வங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மா ! அம்மா! அம்மா !
எனக்கது நீயாகுமா ?
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
பத்துமாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதை தொட்டிலாக்கி
வெள்ளை மனதை தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள் பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
அன்பில் மலரும் அற்புதம் எல்லாம்
அன்னையின் விளையாட்டு அலையும்
மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே
என்று கொஞ்சிய வார்த்தை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை !
சனி, 13 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!