ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )
சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )
உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்
(ஒரு தாய் )
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
(ஒரு தாய் )
சனி, 13 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!