பெண்: சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்திக் கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு
வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு
அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தானே மிச்சம்
கையும் காலும்தானே மிச்சம்
ஆண்: இப்போ காடு வெளையட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
காலம் இருக்குது பின்னே
மண்ணைப் பொளந்து சுரங்கம் வச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம்
பெண்: அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
பெண்: மாடாய் உழைச்சவன் வாழ்க்கையிலே
பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்
ஆண்: அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி!
பெண்: பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
ஆண்: தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
பெண்: வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்க செய்வது மோசமன்றோ
ஆண்: இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி
பெண்: நல்லவர்கள் ஒன்றாய் இணைந்து விட்டால் - மீதம்
உள்ளவரின் நிலை என்ன மச்சான்
ஆண்: நாளை வருவதை எண்ணி எண்ணி
நாழிக்கு நாழி தெளிவாரடி
பெண்: அட காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
ஆண்: பட்ட துயர் இனி மாறும்
கிட்ட நெருங்குது நேரம்
கிட்ட நெருங்குது நேரம்!
நானே போடப் போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு
படம்: நாடோடி மன்னன்
காலம்: 1956
பாடியது: TMS பானுமதி
சனி, 13 பிப்ரவரி, 2010
சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி!
குறிப்புகள் :
நாடோடி மன்னன்,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
M.G.R,
novideo
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது வெறும் பாடல் மட்டும் அல்ல!
பதிலளிநீக்குவாழ்க்கைப் பாடம்!