Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

நலம் வாழ என்னாளும்


நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும் (நலம் வாழ..)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம் கிளியே... (நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்.. (நலம் வாழ..)

படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி

சேவல் கொடி பறக்குதடா


வேல்! வேல்!! வேல்! வேல்!!
சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா,
வேலும் படி ஏறுதடா வேலய்யா!
காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா,
பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா? (சேவல் கொடி பறக்குதடா...)

கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! குமரனுக்கு அரோகரா!

தெருக்கூத்து தமிழனுக்கு முதலாட்டம்!
புலிவேஷம் எங்களுக்குப் புகழ்கூட்டும்!
வீரம்தான் கந்தனுக்குத் தாய்ப்பாலு!
சூரனையும் சுளுக்கெடுத்த நம்மாளு!

வேடன் அடா வேடன் - இவன் தணிகைமலை நாடன்!
வீரன் அடா வீரன் - நாம கந்தனுக்குப் பேரன்!
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்!
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்!! - நீ

காட்டுக்குள்ள நடமாடி, காட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா? (சேவல் கொடி பறக்குதடா...

மனுஷன்தான் முருகனோட அவதாரம்!
வீரத்தைத் தத்தெடுத்தா சிவதாரம்!
வேல்குத்தி ஆடும்போது வெறியேறும்!
தேர்சுத்தி ஓடும்போது பொறியாடும்!
ஏறு மலை ஏறு! எங்கண்ணனை நீ பாரு!
ஆறு முகம் யாரு? நம்ம நண்பன்தானே கூறு!
தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?

விண்ணும் மண்ணும் தடதடக்க,
காற்றும் புயலும் கடகடக்க,
வாரான் வாரான் மலையேறி வேலய்யா! - வேல் வேல்!!
வேலும் மயிலும் பரபரக்க,
காடும் மலையும் வெடவெடக்க,
வாரான் வாரான் வரிசையிலே முருகய்யா! - வேல் வேல்!!

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்! - நீ
காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி,
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா!
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா?
நான் பாட்டுக்குள்ள ஒன்ன வச்சி பாடட்டா? (சேவல் கொடி பறக்குதடா...)

படம்: பில்லா 2007
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
பாடலாசிரியர்: பா.விஜய்

ஆடாத ஆட்டமெல்லாம்


ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போனதென்ன
உண்மை என்ன உனக்கு தெரியுமா?

வாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே
நீயும் நானும் நூறு வருஷம்
இருப்பதில்லையே பாரு (ஆடாத..)

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்துக்கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து
தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே
பாதை மாறி போகாதே
பூமி கொஞ்சம் குலுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே.. (ஆடாத..)

ஹேய்.. கருவறைக்குள் காணாத
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக
தொடரும் ஆட்டமே
பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே
போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம்
காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும்போது
ஊரு போடும் ஆட்டமே.. (ஆடாத..)

படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்
Related Posts Plugin for WordPress, Blogger...