Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 12 பிப்ரவரி, 2011



பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

இதயமெனும் பூப்பறித்தேன்
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே
நீ காலில் மிதித்தாய் பெண்ணே
(பேசா மடந்தையே..)

ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன்
வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மன நிலை கண்டு தெளியும் முன்
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலை சொல்லி கரம் குவித்தேன்
கற்புக்கு பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்கு பூப் பறித்தேன்
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்

வார்த்தைகளால் காதலித்தேன்
ஜாடைகளால் சாகடித்தாய்
மழை தான் கேட்டேன் பெண்ணே
இடி மின்னல் தந்தாய் கண்ணே
(பேசா மடந்தையே..)

மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை
ஐயோ இதயம் பொறுக்கவில்லை

கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனம் சகிக்க வில்லை

உன் சினம் கண்டு என் இதயம்
உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடி முளைக்கும்
மனம் உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் வாலினும் கொடியது
(பேசா மடந்தையே..)

படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

காதல் என்பது பொது உடைமை


காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா


ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆள் இங்க யாரு
புத்தனும் போன பாதைதான்
பொம்பள என்னும் போதைதான்
அந்த மேகம் வந்திடும் போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகம்தான்
உண்மைய எண்ணிப் பாருடா
இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒன்னாக கலந்த உறவுதான்
எந்நாளும் இன்பம் வரவுதான்
இது காதல் என்கிற கனவு
தினம் காண எண்ணுற மனசு
இது சேர துடிக்குற வயசுதான்
வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்
இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான்

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா


நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

ஆடாத ஆட்டமெல்லாம்


ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்.
பாவங்களை மேலும் மேலும்
செர்த்துகொன்டே போகின்றோம்.

மனிதன் என்ற வேடம் போடு,
மிருகமாக வாழ்கின்றோம்.
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து,
தீமைகளை செய்கின்றோம்.

காலம் மீண்டும் திரும்பாதே!
பாதை மாறி போகதே!!
பூமி கொஞ்சம் குலுன்கினாலே
நின்று போகும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

ஹேய்.. கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்,
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே!
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்,
காதல் வந்த பின்னாலே, போதையாட்டமே!

பேருக்காக ஒரு ஆட்டம்,
காசுக்காக பல ஆட்டம்.
எட்டு காலில் போகும்போது,
ஊரு போடும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?

அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா

நானாக நான் இல்லை தாயே



நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

கீழ் வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீதானே நீர் வார்த்த கார் மேகம்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோயில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேறில்லை

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே


நட்பினிலே, நட்பினிலே



திரைப்படம்: காதல் கொண்டேன்
பாடல்: நட்பினிலே
பாடகர்கள்: கிடைக்கவில்லை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர்: வைரமுத்து
================================================================================
ஓஊ.....
நட்பினிலே, நட்பினிலே, பிரிவு என்பதே எதும் இல்லை,
நட்பினிலே, நட்பினிலே, பிரிவு என்பதே எதும் இல்லை,
யென் மனமும், உன் மனமும் பேச வார்தைகல் தெவை இல்லை,
ஊல்லுக்குலே, உல்லுக்குலே, ஆயிரம் யென்னங்க்கல் ஒடுதடி,
ஆட்தனையும், அட்தனையும், உந்தன் பார்வை தேடுதடி,
ஏட்தனை நால், எட்தனை நால், இப்படினான் வாழ்ந்திருப்பென்,
நீயும் இல்லை என்று சொன்னல், எந்த நிழலில் ஊய்வெடுப்பென்,
ஓஊ.....

இறைவன் படைத்த உலகை

பாடல்: இறைவன் படைத்த உலகை எல்லாம்
திரைப்படம்: வா ராஜா வா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: நெல்லை அருள்மணி
 இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1969



இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
ஒன்றும் நடப்பதில்லை

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
இறைவன் ஒன்றாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இறைவன் மனமாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
Listen/Download at: இறைவன் படைத்த உலகை எல்லாம்

தாயிற் சிறந்த


தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோயிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கடவுளும் தாயும் கருணையும் ஒன்று!

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
Related Posts Plugin for WordPress, Blogger...