Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

சிந்தனை செய்மனமே



படம்: அம்பிகாபதி
பாடியவர்: டி எம் செந்தரராஜன்
இசை: ஜி ராமநாதன்


சிந்தனை செய்மனமே
சிந்தனை செய்மனமே..தினமே

சிந்தனை செய்மனமே..செய்தால்
தீவினை அகண்றிடுமே..
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய்மனமே..செய்தால்
தீவினை அகண்றிடுமே..
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய்மனமே.. மனமே..
மனமே.. ஏ..ஏ..ஏ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..
ஞான தேசிகனை.. ஆ..ஆ..ஆ..

செந்தமிழ்க்கருள்ஞான தேசிகனை..செந்தில்
கந்தனை..வானவர் காவலனை குகனை
சிந்தனை செய்மனமே.. செய்தால்
தீவினை அகன்றிடுமே..
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய்மனமே..மனமே.. ஏ..ஏ..ஏ..

சந்ததம் மூவாசை
சகதியில் உழன்றனை ஈ..ஈ..ஈ..

சந்ததம் மூவாசை
சகதியில் உழன்றனை..
சமரச சன்மார்க்க
நெறிதனை மறந்தனை..
சமரச சன்மார்க்க
நெறிதனை மறந்தனை..
அந்தகன் வரும்போது
அவனியில் யார் துணை..
அந்தகன் வரும்போது
அவனியில் யார் துணை..
ஆதலினால் இன்றே
அருமறை..பரவிய..சரவணபவ..குகனை
சிந்தனை செய்மனமே..
செய்தால்
தீவினை அகன்றிடுமே..
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய்மனமே..
மனமே.. ஏ..ஏ..ஏ..

சத்தியம் நீயே ....



ட்ரிய்யோ *ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...

சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே
குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே

காலையிலே உன் முகம் பார்த்த பின்னே
காலையிலே உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள் எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...


சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்

ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு

சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே


பாடல் வாலி
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர் :டி.எம்.எஸ்
மாட்டுக்கார வேலன்

நெஞ்சம் உண்டு ....



நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
அடிமையின் உடம்பில் ரதம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு(2)
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..ஹேய்.................


அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்(2)
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹேய்..........


உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து(2)
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

தரை மேல் ...



உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒருநாள் பொழுதும் புலராதோ

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு (2)
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை(தரை மேல்)

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம் (2)

அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
(தரை மேல்)

நான் பாடும் பாடல் ...



நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெல்லம் நதியாக ஓடும் அதில்
இள நெஞ்சம் படகாக ஆடும்
(நான் பாடும்..)

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
எங்கே நானென்று தேடட்டும்
உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த
எங்கே நானென்று தேடட்டும்
உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்
(நான் பாடும்..)

நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருதாலோ தனிமை
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருதாலோ தனிமை
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்
(நான் பாடும்..)

Song: naan paatum paatal - பாடல்: நான் பாடும் பாடல்
Movie: Naan yen pirandhen - திரைப்படம்: நான் ஏன் பிறந்தேன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: Shankar Ganesh - இசை: சங்கர் கணேஷ்
Year: - ஆண்டு: 1972

ஒரு தாய் மக்கள் ....



ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்


உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்

திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: T.m. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: M.s. விஸ்வநாதன், b. ராமமூர்த்தி

இப்படித்தான் இருக்க வேண்டும் ....

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
இங்கிலீஷ படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே


உங்க சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க
நான் எப்படி எப்படி இருக்கணுமோ
அப்படி அப்படி மாத்துங்க
சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க
(இப்படித்தான்)

மானம் பாத்த வெவசாயிங்க நாடு அல்லவோ -
இங்குமானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ..
அதுக்கு...(இப்படித்தான்)


பூமுடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா -
இப்பபொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு நாட்டுலே -
பெண்கள்காரியத்த ஆம்பள பாக்குறான் வீட்டுல


எல்லாரோட என்னையும் சேக்கக் கூடாது -
வேலைஎது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது..
சொல்லுங்க
களையெடுக்கணும் வெளைய வைக்கணும்
கதிரு முத்தின வயலறுக்கணும்
கட்டுஞ் சொமக்கணும் களமுஞ் சேக்கணும்
காத்தப் பாத்து தூத்தி விடணும்
காலம் நேரம் கடந்திடாமே
நாலாவேலையும் நாமே பாக்கணும்
ஹோ..ஹோ..ஹோ..
அதுக்கு
(இப்படித்தான்)

பாரப்பா பழனியப்பா

பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம் அழகழ‌காய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த அடுக்கடுக்காய் சுமக்குதப்பா
ஏட்டினிலே படிக்குதப்பா எடுத்துச்சொன்னா புரியலேப்பா
நாட்டுக்குதான் ராணியப்பா வீட்டுக்கு அவ மனைவியப்பா


பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

ப‌ட்ட‌ணத்துக் காத‌ல‌ப்பா பாதியிலே ம‌றையும‌ப்பா
ப‌ட்டிக்காட்டு காத‌லுக்கு கெட்டியான‌ உருவ‌ம‌ப்பா
காசுப‌ண‌ம் சேருத‌ப்பா காரு வ‌ண்டி ப‌ற‌க்குத‌ப்பா
சேத்த‌ ப‌ண‌ம் செல‌வழிஞ்சா நாட்டுப்ப‌க்க‌ம் ஒதுங்குத‌ப்பா

பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்

வரிகள்: கவிஞர் கண்ணதாஸன்.
படம்: பெரிய இடத்துப் பெண் ...

நல்ல நல்ல ....


நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

அன்பில் உயர்ந்தவர் யாரு? வள்ளலார்
ஆமா.. வள்ளலார்
அறிவில் உயர்ந்தவர் யாரு?வள்ளுவர்
ஆமா.. வள்ளுவர்
பாட்டில் உயர்ந்தவர் யாரு?பாரதியார்
ஆமா.. பாரதியார்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

வேட்டையாடு விளையாடு ...

வேட்டையாடு விளையாடுவிருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு -
நீவெற்றி எனும் கடலில் ஆடு

குறும்புக்கார வெள்ளாடே
கொடியை வளச்சித் தள்ளாதே
பொறுமையில்லா மனிதரைப் போல்
புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே
அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே
தருமத்தையே மறந்து உந்தன்
துணிவைக் காட்ட எண்ணாதே
(வேட்டை)

நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
செம்மறியாடே நீ சிரமப்படாதே
(வேட்டை)

பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
(வேட்டை)

குறும்பையாடே முந்தாதே
குள்ள நரியை நம்பாதே
கூடி வாழத் தெரிஞ்சுக்கோ
குணத்தைப் போற்றி நடந்துக்கோ
விரிஞ்சு கிடக்கும் பூமியிலே
இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ
விளக்கு வைக்கிற நேரம் வந்தா
வீடிருக்கு புரிஞ்சுக்கோ
(வேட்டை)

திரைப்படம் :அரச கட்டளை
பாடியவர் :
T.m.செளந்தரராஜன்,சுசீலா
இயற்றியவர் : முத்துக்கூத்தன்
திரையிசை :
K.v.மகாதேவன்

உல்லாச உலகம் .....

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்ததம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
செய்யடா செய்யடா செய்யடா

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்தது......
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்தது
கூரையைப் பிரிச்சி கொட்டுதம்மா
கிடைச்சத்தை நீயும் வாரிவச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
கெத்தாகவே ... கெத்தாகவே எதையும் சேர்த்து வைக்காதே
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

மீச நரச்சி போன பின்னாலே ...
மீச நரச்சி போன பின்னாலே
ஆசை நரச்சி போய்விடுமா
வயசு அதிகம் ஆன பின்னாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காத்திருந்த்தா .,,... காத்திருந்தா
அதை அனுபவிச்சிடனும்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்தது.. பக்கத்தில் வந்து -
ஹூக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி ..பட்டான மேனி
பாத்தாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

பாடல் : உல்லாச உலகம் உனக்கே
திரைப்படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்
பாடியவர் : கண்டசாலா
இயற்றியவர் : மருதகாசி
திரையிசை : S.தக்ஷிணாமூர்த்தி

நினைத்ததை நடத்தியே .....


நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

தங்கம் தங்கும் எந்தன் அங்கம் எங்கெங்கும் ! பொன்னும் பெண்ணும் வந்து மின்னும் கண் எங்கும் !
விளையாட்டு (ப்) பிள்ளைகள் தலையாட்டும் பொம்மைகள்
வர வேண்டும் எல்லோரும் உறவாட இந்நேரம் !
பட்டாடை தொட்டாட (க்) கட்டாயம் வா !! ((நினைத்ததை))

பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம் !
கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம் !
படைத்தான் ஒரு உலகம்
பணம் தான் அதன் உருவம் !
எதுவும் இதில் அடக்கம் -
இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !! ((நினைத்ததை))

செந்தேனை வடிப்பது தாமரை கன்னம் -
அதை சிந்தாமல் கொடுப்பது பூவிழி(க்) கிண்ணம்
முதல் நாள் - மெல்ல தொடலாம்
மறு நாள் - மிச்சம் பெறலாம்
அவன்தான் நல்ல ரசிகன்
இதை அறியாத நீ யாரோ புது(ப்) பாடகன் ((நினைத்ததை))

சொல்லாமல் நடப்பது நாடக மொன்று
அது இன்றோடு நில்லாமல் நாளையும் உண்டு !
இதழ்மேல் ஒரு பாடல்
மடிமேல் விளையாடல்
இடையில் சிறு ஊடல்
இதை நான் சொல்லத் தானிந்த விழி ஜாடைகள் ((நினைத்ததை))

ஒன்றே குலமென்று ...




படம்: பல்லாண்டு வாழ்க
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கவிஞர் புலமைப்பித்தன்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

-------------------------------

அன்பிலார் எல்லாம் தமர்க்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக்கூலி தரும்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

கடவுளிலே கருணைதனைக் காணலாம்-அந்தக்
கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

பாவமென்ற கல்லறைக்குப் பலவழி-என்றும்
தர்மதேவன் கோவிலுக்கு ஒருவழி
அந்தவழியொன்றுதான் எங்கள்வழியென்றுநாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்-அவர்
என்றும்வாழும் கொள்கைதீபம் ஏற்றினார்
அந்த ஒளிகாணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளைவரலாறு நமக்காக உருவாகலாம்

நாளை உலகை ...

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே


நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெலாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை


நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

கல்விக்கு சாலை உண்டு
நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்கு தேவை எல்லாம்
நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு
தோற்காத நியாயம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு
நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

Song: naaLai ulakai aaLa vENtum- பாடல்: நாளை உலகை ஆள வேண்டும்
Movie: uzhaikkum karangal - திரைப்படம்: உழைக்கும் கரங்கள்
Singers: K.J. Jesudas - பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
Lyrics: Poet Pulamai piththan - இயற்றியவர்: புலமைப் பித்தன்
Music: M.S. Viswanathan - இசை: எம். எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1976

கடவுள் செய்த பாவம் .....

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
கடவுள் செய்த ................

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
கடவுள் செய்த ................

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி (2)
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே (2)
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும் (2)
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
கடவுள் செய்த ................

Song: kadavul seitha paavam - பாடல்: கடவுள் செய்த பாவம்
Movie: Nadodi - திரைப்படம்: நாடோடி
Singers: T.M. Soundararajan, - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்,
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1966  


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...

அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

யானை இடம் நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான் ?
மனிதனுக்கு என்ன வைத்தான்
( அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

படம : பெரிய இடத்து பெண்
இசை : M.S.V , ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S, P.Susheela

வெற்றி மீது வெற்றி வந்து ..

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்

ஏற்றமுன்னா ஏற்றம் ...

ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்

கிணற்று நீரை நிலத்துக்கு தான் எடுத்து தரும் ஏற்றம்
கிளைவெடிக்கும் பயிர்களுக்கு உயர்வளிக்கும் ஊட்டம்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும் -
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்

உடும்பு போல உறுதிவேனும்
ஓணான் நிலைமை திருந்தனும்
உடைஞ்சு போன நமது இனம்
ஒன்னா வந்து பொருந்தனும்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

ஓதுவார் தொழுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையிலே
உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
நீதிஎன்ற நெல் விளையும்
நெருஞ்சி படர்ந்த தரிசிலே
போடு .... தந்தனத் தானே
ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ

விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
நிதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்பு சேரனும்
நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும்
தந்தனத் தானே ஏலேலோ .....
தந்தனத் தானே ஏலேலோ .....

காசிக்கு போகும் சந்நியாசி ..

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்கு போகும் பரதேசி...
கங்கைக்கு போகும் பரதேசி
நீ நேத்துவரையிலும் சுகவாசி

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
பட்டது போதும் பெண்ணாலே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும்
சிவ சிவ சிவனே
சிவ சிவ சிவனே
ஆ... சிவனே ஆ...
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி

அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
தலைஅணை மந்திரம் மூளையை தடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்

பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்

காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை

சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
அவள் துணையினை பிரிவது முறையோ
பகைதான் வளரும்
பகையே அன்பாய் மலரும்
பிரிந்தவர் இணைந்திட படுமோ
மணந்தவர் பிரிந்திட தகுமோ
இல்லறம் நல்லறமே

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...


ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை ஆத்திர மெய்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர்போல் வெளி வேஷங்கள்
அணிந்து நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம்
காத்து நடப்பவர் தம்மை மறப்பதில்லை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம்
காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே ஆஆ....
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

பாடல் :கண்ணதாசன்
இசை :டி.ஆர்.பாப்பா
பாடியவர் :சீர்காழி கோவிந்தராஜன் 

பலப் பல ரகமா...

பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு

அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடுத்தவர் பையில் இருப்பதை கையில்
அள்ளி கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு
புத்தி கெட்டு ...சக்தி கெட்டு....
பொளப்பை எல்லாம் விட்டுவிட்டு
சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) .....
(பல பல பல பலரகமா).......

மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
அங்குமில்லாமே இங்குமில்லாமே
அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு
உறக்கம் கெட்டு ........வழக்கம் கெட்டு...
ஊரு வம்ப கேட்டுக்கிட்டு
உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு (2) ....
(பல பல பல பலரகமா).......

அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கையில்லாமே வாடி போன வீட்டினையும் திறக்குது சாவி
தங்கமக்கா....உள்ளத்திலே...
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தால் உடைத்து போடும்
தர்மத்தின் சாவி(2) ....
(பல பல பல பலரகமா.......)

எத்தனை பெரிய மனிதருக்கு ...



இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
(எத்தனை பெரிய)

உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)

கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி
ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்....
(எத்தனை பெரிய)


திரைப்படம்: ஆசைமுகம்
பாடியவர்:
T.m.செளந்தரராஜன்
இசை:எஸ் எம் .
சுப்பையா நாயுடு

உன்னைப் பார்த்து .....

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை


உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்


தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

புத்தன் ,இயேசு .....



புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக


கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )

திரைப்படம்:சந்திரோதயம்
பாடியவர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர்:வாலி
இசையமைத்தவர்கள்:எம்.எஸ்.விஸ்வநாதன்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

ஒருவன் மனது ....

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான்(2)
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னல சேற்றில் விழுகின்றான்(2)
பேய்போல் பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை பழிக்கின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

இசை :கே.வி.மகாதேவன்
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்

கடவுள் ஏன் கல்லானான் ....

கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)

சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)

திரைப்படம் : என் அண்ணன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : K.V.மகாதேவன்

நாலு பேருக்கு நன்றி ...

உள்ளத்தில் இருப்பதெல்லாம்..
சொல்ல ஓர் வார்த்தையில்லை..
நான் ஊமையாய் பிறக்கவில்லை..
உணர்ச்சியோ மறையவில்லை..
என் தங்கமே உனது மேனி..
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி


நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி

உறவு என்றும் பாசம் என்றும்
இறைவைன் பூட்டிய விலங்கு
அழுவதர்க்கும் சிரிப்பதர்க்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
அது வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி

இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி

நான் யார் ....

நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்
ஹாஹ ஹாஹாஹ........

உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ ?
வருவார் இருப்பார் போவார் -
நிலையாய் வாழ்வார் யார் யாரோ ?


நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்

உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ ?
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ ?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ ?
எதிர்ப்பார் யார் யாரோ ? ஊ......


இனியார் வருவார் மருந்தார் தருவார்
பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்
துணை யார் வருவாரோ?
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார்
நாளை யார் யாரோ?
பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார்
முடிந்தார் யார் யாரோ ?
முடிந்தார் யார் யாரோ ?

நான் யார் நான் யார் நீ யார்?

தாய் மேல் ஆணை ...


தாய் மேல் ஆணை...
தமிழ் மேல் ஆணை...
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் (தாய் மேல்)

இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை... (தாய் மேல்)

தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவை இல்லை
இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே
எடுப்பவர் யாரும் இல்லை
பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
வார்த்தையில் அடங்கவில்லை...
வார்த்தையில் அடங்கவில்லை... (தாய் மேல்)

நான் படித்தேன் காஞ்சியிலே ...


தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று) -

ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு


ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை

ஓடி ஓடி உழைக்கணும் ...



ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்

வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறந்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
நான் அன்போட சொல்லுறத கேட்டு
நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்

சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
சுறுசுருப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா
துணியும் கிடைக்காது தம்பி
சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
சுறுசுருப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா
துணியும் கிடைக்காது தம்பி
இத அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லி போடு

ஓடி ஓடி உழைக்கணும்

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்  

நல்ல பேரை வாங்க வேண்டும் .....


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான தெய்வீகமாகும்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
லாலல லாலல லாலல லாலல

கண்ணை நம்பாதே ....



கண்ணை நம்பாதேகண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)

குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம் .

பாடல்: கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
படம்: நினைத்ததை முடிப்பவன் – 1975
வரிகள்: மருதகாசி
பாடியவர்: T.M.சௌந்தர்ராஜன்
இசை: M.S.விஸ்வநாதன்

தைரியமாகச் சொல் நீ ....

தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்

போயும் போயும்...



போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை
இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே-
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே -
இதய போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

கைகளை தோளில் போடுகிறான்-
அதை கருணை என்றவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்-
அதை கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

என்னதான் நடக்கும் ...



என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தநனாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

திரைப்படம்:பணத்தோட்டம்
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன் 

அங்கே சிரிப்பவர்கள் ..


அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
(அங்கே சிரிப்பவர்கள் )

நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
(அங்கே சிரிப்பவர்கள் )

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்
(அங்கே சிரிப்பவர்கள் )

சிரித்து வாழ வேண்டும்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு
வணங்கும்
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தன்னை
துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்
பூவைப் போலே சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே


முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
வானில் நீந்தும் நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும்
பள்ளிக் கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செய்ய
பாதை அங்கே இருக்கும்
பாதை அங்கே இருக்கும்
எங்கும் வாழும் மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

கண்ணே கலைமானே கன்னி மயிலென

திரைப்படம்: மூன்றாம் பிறை
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1982

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை கோலம் விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்று என் சன்னதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

திரைப்படம்: கருப்புப் பணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா

திரைப்படம்: முத்து மண்டபம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆஆஆஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழ்கிறேன்

சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொத்தி விட்டு புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா

இல்லாத மனிதருக்கு இல்லையென்னும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா ஆஆஆஆஆஆ

சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா

படம்: நல்ல தம்பி
இயற்றியவர்: என்.எஸ். கிருஷ்ணன்
பாடியவர்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்
ஆண்டு: 1949

நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா
நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா
ஆட்டமாடி பாட்டுப் பாடி அழகான ஜதையோடு வந்தானையா
ஆட்டமாடி பாட்டுப் பாடி நல்ல அழகான ஜதையோடு வந்தானையா

சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தானையா
சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தானையா

மோட்டாவை விட்டிறங்கி வந்தானையா
முன்குடுமி திருத்தி கிட்டு வந்தானையா
ராட்டினம் போல் சுழன்று வந்தானையா நம்ம
ராஜ்ஜியத்தை சுத்திப் பாத்து வந்தானையா

தச்சோம் திரிச்சோம் ஜரிகை செம்பட்டு வெம்பட்டு கிளிஞ்சது போ

ஹங், ஐயா கோமாளியாரே

என்ன ஏமாளியாரே

உங்கள ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுங்க.

ஒண்ணென்ன ஒம்பது கேளும் பதில் சொல்றேன்.

அந்தக் காலத்துலே...

நிறுத்தும், அந்தக் கால சங்கதி நமக்கு வேண்டாம், இந்தக் காலத்தைப் பத்திக் கேளும்.

சரி, இந்தக் காலத்துல தான் எங்க பாத்தாலும் பொய்யும் பொரட்டும்,

நிறுத்தும், பொய்யு்ம் பொரட்டும் நீங்க சொன்ன அந்தக் காலத்தில. இந்தக் காலம் நீதியான காலமையா நேர்மையான காலம். இன்னுஞ் சொல்றேன் கேளும்.

அன்னியர்கள் நமையாண்டதந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வதிந்தக் காலம்
பேசுதற்கும் உரிமையற்ற தந்தக் காலம்
பிரச்சாரப் பெருமையுற்ற திந்தக் காலம்

மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது அந்தக் காலம்
அது அந்தக் காலம்
மடமை நீங்கி நமதுடைமை கோருவது இந்தக் காலம்
நெனெச்சதை எல்லாம் எழுதி வைத்தது அந்தக் காலம்
அது அந்தக் காலம் எதையும்
நேரில் கண்டே நிச்சயிப்பது இந்தக் காலம்
மழை வருமென்றே மந்திரம் ஜெபிச்ச தந்தக் காலம்
அது அந்தக் காலம் மழையைப்
பொழிய வைக்கவே யந்திரம் வந்தது இந்தக் காலம்
இழிகுலமென்றே இனத்தை வெறுத்ததந்தக் காலம்
அது அந்தக் காலம் மக்களை
இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவதிந்தக் காலம்

த்ரோபதை தனை துகிலை உரிஞ்சான் அந்தக் காலம்
அது அந்தக் காலம் பெண்ணைத்
தொட்டுப் புட்டா சுட்டுப் புடுவான் இந்தக் காலம் பெண்ணைத்
தொட்டுப் புட்டா சுட்டுப் புடுவான் இந்தக் காலம்

சாத்திரம் படிப்பது அந்தக் காலம் சரித்திரம் படிப்பது இந்தக் காலம்
கோத்திரம் பாப்பது? அந்தக் காலம் குணத்தைப் பாப்பது? இந்தக் காலம்
பக்தி முக்கியம் அந்தக் காலம் படிப்பு முக்கியம்
கத்தி தீட்டுவது? அந்தக் காலம் புத்தி தீட்டுவது? இந்தக் காலம்

பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சான் அந்தக் காலம்
அது அந்தக் காலம் - வாழ்வின்
கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம் வாழ்வின்
கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம்

பலே பலே, ஐயா கெட்டிக்காரக் கோமாளியாரே, இன்னைக்கு நடக்கப் போகும் இந்திரசபா எனும் கூத்திலே ஆசீர்வாதம் தாங்கும்படியா உம்மைக் கேட்டுக்கொள்கிறேன்.

நமஸ்காரம்

ஆசீர்வாதம்

ஆசி எனக்கு, வாதம் உமக்கு.

ராஜ ராஜ மஹாராஜதா பைரவின்னு இங்கே வந்தேனே ஏ..ஏ..ஏ..ஏ...ஏ..
தேவ தேவ சரச சரச தீனநாதரேந்திர
ஆவலாலே ஆயிரங்கண் அணிந்த ரூப சுந்தர
ஆலாதி அமுதமுண்டோ ஐராதி தன்னைக் கொண்டோ?
தேவ தேவ சரச சரச தீனநாதரேந்திர

ஐயா, கேளுமையா இந்திர பூபதியே, நாரதர் சபையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

சந்தோஷம், நாரதரே நமஸ்கரிக்கிறேன்.

கல்யாண், கல்யாண்.

தாங்கள் இந்த சபைக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?

ஆஹா, அதை என்னவென்று சொல்லுவேன்? பூலோகத்தில் நடக்கும் புதுமைகளைக் கண்டு என் மனம் புளகாங்கிதமடைந்தது.

அப்படி என்ன புதுமை கண்டீர்?

அதை சபையில் பவிஸ்தாரமாகச் சொல்லுவதற்கு பூலோகத்திலிருந்து ஒரு நரன், ஒரு நரை இருவரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இதோ பாருங்கள்.

ஏ கோமாளி மச்சான்

என்ன?

இது எந்த இடங்கறேன்?

இது அந்திரத்திலே இருக்கும் இந்திரலோகம், பளா பளா

ஆத்தாடி, இந்த மனுஷன் என்னாங்கறேன் இப்படி இருக்காரு?

மனுசன் இல்லேடியம்மா, இவங்க எல்லாம் தேவரு, அவரு தேவருக்கு அரசரு, இந்திரன்.

ஓஹோ, பொட்டி மகன் இந்திரரு இவுரு தானா? அகலிகை மேல ஆசைப்பட்டு, ஒடம்பெல்லாம்..

சட், யார் நீங்கள்?

பட், மனுஷன்

எந்த ஊர்?

தருமம் தழைத்தோங்கும் தமிழ் நாடு, பளா பளா.

எங்கள் நாட்டை விடப் பெரிதா? மளா மளா.

பெரிதல்ல, பெருமை வாய்ந்தது.

எந்த வகையில்?

சொல்றேன் கேளுங்கோ.

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
முதல் முதலாக நல்லவை யாவும்
முதல் முதலாக நல்லவை யாவும் முயன்று முடிப்பது தமிழ்நாடு

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

பாட்டால் உணர்த்தி ஊட்டும் கவி பாரதி சேர் தமிழ்நாடு
நாட்டு மக்கள் முன்னேற்றம் தனை நாடியே கவிதை பாடிவைத்த தமிழ்

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

உலகம் வியக்க சுதேச கப்பல் ஓட்டியதும் தமிழ் நாடு
திலகமெனப் புகழ் ஓங்கும் எங்கள் சிதம்பரம் பிள்ளை செயல்புரிந்த தமிழ்

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

உலகில் முதலில் கள்ளை ஒழித்ததும் எம் தமிழ்நாடு
உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய் உணர்ந்து நடப்பதில் எமக்கீடில்லை

கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு

கள்ளை ஒழித்து கண்ணியம் பெற்றது எங்கள் நாடு.

பூலோகத்தில், மதுவை ஒழித்து விட்டார்களா? ஆச்சர்யம் ஆச்சர்யம், நரனே, முன்னொரு சமயம் அமெரிக்கா என்னும் நாட்டில் இந்த மதுவிலக்கு செய்து ஃபெய்லியர் ஆகிவிடவில்லையா?

ஃபெய்லியர், அப்படி என்றால்?

தோல்வி.

தோல்வி, எங்கள் நாடிலே அப்படி நடக்காது. ஏனென்றால் குடிப்பது பாபம் என்று நினைக்கும் நாடு. குடித்தேன் என்று சொல்ல வெட்கப் படும் நாடு. ஆகையினாலே நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம், நிச்சயம், நிச்சயம்.

இதை நான் நம்ப முடியாது, பெண்ணே, உண்மையில் உங்கள் நாட்டில் மதுவை ஒழித்து விட்டார்களா? சொல்.

குடிகெடுத்த குடி ஒழிஞ்சது அடி தடி சண்டை அது கொறைஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தியறிஞ்சது எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே
குடிகெடுத்த குடி ஒழிஞ்சது அடி தடி சண்டை அது கொறைஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தியறிஞ்சது எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே

தாலிக் கயிறு தனியா இருக்கும் தங்கமிருக்காது அதிலே தங்கமிருக்காது
தண்ணி குடிக்க தகரக் கொவள செம்புமிருக்காது வீட்டிலே செம்புமிருக்காது
பாலு வாங்க குழந்த பசிக்குப் பணமிருக்காது கையிலே பணமிருக்காது
பாழுங்கள்ளக் குடிப்பது மட்டும் நாளுந்தப்பாது எந்த நாளுந்தப்பாது
கூலிக் காசில் சோளம் வாங்கிக் கூழுக் காச்ச வச்சிருப்பா
ஆளதந்தா அம்பள தான் அதையும் வித்துக் குடிப்பான்
கடைக்குப் போவான் கள்ளக் குடிப்பான் காரியமில்லாம சண்டைக்குப் போவான்
வடைய ரண்டை வாங்கிக்குவான் வழி நெடுக பேசிக்குவான்
வந்து கதவைத் தட்டுவான் வாயிலே வந்ததைத் திட்டுவான்
வாழ்வின் சுகத்தை விரும்பும் பெண்ணை வஞ்சகக் காரி என்றுரைப்பான் அவன்
வாரிசுக்காக சிசுவைத் தாங்கும் வயித்திலெ எட்டி மிதிப்பான்
அப்பப்பா, இந்தக் கள்ளுக் குடிய நம்ம
நாட்ட விட்டு ஒழிச்ச அந்த நல்ல மனுஷன் காலுக்கு
கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கும்பிடு.
(கை தட்டல்)
பெண்ணே, மது ஒழிந்தது பெண்களுக்குத் தான் மிகவும் நன்மை என்று உன்னால் தெரிந்து கொண்டேன்.

ம்ம்ம்ம் ஆண்களுக்கும் நல்லது தான்.

அது எப்படி?

மது ஒழிவதற்கு முன்னாலே நான் பாதி வேளை மிருகமாகத் தானே இருந்தேன்.

மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
பனமரப் பாலு பட்டை பிராந்தி பக்கம் வந்தால் எடுக்குறேன் வாந்தி
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்

இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே அக்டோபர் மாதம்
இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே என் கண்ணுக்குன்னை
இரண்டாளாகத் தெரிஞ்சது பெண்ணே என் கண்ணுக்குன்னே
இரண்டாளாகத் தெரிஞ்சது பெண்ணே

சுருண்டு சுருண்டுதான் சும்மாப் படுப்பேன்
சுதிய விட்டுக் கூடப் பாட்டுகள் படிப்பேன்
வரண்ட காரவடை வாத்து முட்டை கரு
வாட்டைத் தின்ன வாய் நாத்தம் நீங்கி நான்

மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்

மது, அருந்திய உடனே ஞாபகம் வருவது மாது. நாரதரே, நான் கூட அகலிகை வீட்டுக்குச் சென்று சில தவறுகள் செய்ததற்குக் காரணமாக இருந்தது இந்த மது தான். நரனே இதற்கு என்ன செய்வது?

குடிச்சுப் பழகனும் குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்கோ குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்கோ குடிச்சுப் பழகனும்

ஐயையோ! என்னாங்க இது? குடிச்சுப் பழகணும்னு சொல்றீங்களே?

ஆமாம் பழகணும், இல்லாமப் போன மறக்க முடியாது. அதாவது, இந்தக் குடியை ஒழிச்சாங்களே, அவங்க மனசு சந்தோஷப் படணும்னா, எல்லோரும் ஒத்துமையா

குடிச்சுப் பழகனும் குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக்
குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக்
குடிச்சுப் பழகனும் பாலைக் குடிச்சுப் பழகனும்

பாலு வாங்கப் பணமில்லேன்னா டீயைக் குடிச்சுக்கோ
டீயும் கெடுதலுன்னு தெரிஞ்சா மோரைக் குடிச்சுக்கோ
மோரு நமக்குக் கெடைக்கல்லே
நீராகாரம் இருக்கவே இருக்கு குடிச்சுப் பழகணும் குடிச்சுப் பழகணும்

காலையில் பல் தேய்த்த உடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்
காலையில் பல் தேய்த்த உடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்

வாஸ்தவம் தான், ஒழித்து விட வேண்டிய விஷயம் தான். நாரதரே, இன்று முதல் நம் தேவலோகத்தில் யாரும் மது அருந்தக் கூடாதென்று சொல்லும், மீறி அருந்துவார்களேயானால், அவர்களை நரகக் குழியில் கொண்டு போய்த் தள்ளிவிடும் படி நான் கட்டளையிட்டதாகச் சொல்லும். நரனே, நீ கொஞ்ச காலம் இங்கே தங்கியிருந்து, சொர்க்கலோகத்திற்கும், நரகலோகத்துக்கும் சென்று இந்த மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வாயாக.

ஐயையோ, என் மச்சான் உன்னை நரகலோகத்துக்குப் போகச் சொல்றாரே இவரு.

ஹஹஹஹ, பிரச்சாரத்துக்கு எங்கே போனா தான் என்ன, பெண்ணே, நீ சொர்க்க லோகத்துக்குப் போ, ஏன்னா அங்கே கொஞ்ச ஆளுக தான் இருக்கும், நரகத்துல ரொம்பப் பேர் இருப்பாங்க, நான் அங்கே போய் பிரச்சாரம் பண்ணிட்டு வரேன்.

மதுவை ஒழிப்போம் மதியை வளர்ப்போம் மதுவை ஒழிப்போம் மதியை வளர்ப்போம்.

விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
உடலை வாட்டும் நோய்களுக்கும் தலைவலிக்கும் இன்று முதல்
விடுதலை விடுதலை விடுதலை
பகலும் இரவும் பொங்கிக் கிடந்த பல்லாக்களுக்கும் விடுதலை
பகலும் இரவும் பொங்கிக் கிடந்த பல்லாக்களுக்கும் விடுதலை
பயந்து பயந்து ஏறி இரங்கும் பாட்டாளிக்கும் விடுதலை
பயந்து பயந்து ஏறி இரங்கும் பாட்டாளிக்கும் விடுதலை

ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சா சிறுமிகளுக்கும் விடுதலை
ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சா சிறுமிகளுக்கும் விடுதலை
முகத்தை மூடும் துணிக்கும் கள்ளு மொந்தைகளுக்கும் விடுதலை
முகத்தை மூடும் துணிக்கும் கள்ளு மொந்தைகளுக்கும் விடுதலை
பனை மரத்துக்கும் விடுதலை பனை மரத்துக்கும் விடுதலை,
தென்னை மரத்துக்கும் விடுதலை தென்னை மரத்துக்கும் விடுதலை
பனை மரத்துக்கும் தென்னை மரத்துக்கும் ஈச்ச மரத்துக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை.


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்

படம்: புது வாழ்வு
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1957

உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்

பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரவும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது
உண்மை ஒன்றே பேசும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்

அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
இன்னபயம் தனை மறவா இயல்பதும் வேண்டும்
இன்னபயம் தனை மறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தானே நம்பாதது சந்தேகம்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித
மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்

தன்னைத் தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே ஏ..ஏ
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் -காதில்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த
ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்

தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

படம்: மன்மத லீலை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1976

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

தேரோடும் எங்க சீரான மதுரையிலே

ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ
பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ
மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே
ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓ

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் கெண்டைகள் துள்ளிட
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
தூது சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டுவிழியெனும் கெண்டைகள் துள்ளிட

தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

படம்: பாகப் பிரிவினை
இயற்றியவர்: மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: எய்.எம். சௌந்தரராஜன், பி. லீலா
ஆண்டு: 1959

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

படம்: பணம் பந்தியிலே
இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை - உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் - பணம்
அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை - இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு - அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு - நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

படம்: எல்லாம் இன்பமயம்
இசை: கண்டசாலா
பாடியவர்: கண்டசாலா
ஆண்டு: 1955

எல்லாம் இன்பமயம் இன்பமயம் எல்லாம் இன்பமயம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

நல்ல குணம் செழித்து நாடு வளம் கொழித்து
நல்ல குணம் செழித்து நாடு வளம் கொழித்து
பல்கும் தொழில் வளர்த்துப் பாடுபட்டாலே
பல்கும் தொழில் வளர்த்துப் பாடுபட்டாலே

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

அன்பினில் உலகாளலாம் எந்நாளும்
அமைதியில் நலங்காணலாம் எல்லோரும்
அன்பினில் உலகாளலாம் எந்நாளும்
அமைதியில் நலங்காணலாம் எல்லோரும்
இல்லார் இருப்பவர் என்றிடும் பேதம்
இல்லார் இருப்பவர் என்றிடும் பேதம்
இலை எனச்செய்தால் சமமுயர்ந்தோங்கும்
இலை எனச்செய்தால் சமமுயர்ந்தோங்கும்

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம் எல்லாம் இன்பமயம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1975

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்





படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்.rar

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

தமிழன் இதயம்
தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

'பத்தினி சாபம் பலித்துவிடும்'
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்.

சிந்தா மணி,மணி மேகலையும்,
பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.

தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை ; சரித்திரம் அசைபோடும்;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

'கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும்;
எல்லாப் புகழும் இவைநல்கும்;'
என்றே தமிழன் புவிசொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்;
தானம் வாங்கிடக் கூசிடுவான்;
'தருவது மேல்' எனப் பேசிடுவான்.

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் செய்தவனாம்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன்; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்;
சாந்தம் தவறா துடனிருந்தான்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று



பாடல்: குழந்தையும் தெய்வமும்
திரைப்படம்: குழந்தையும் தெய்வமும்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1965



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று


This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

படம்: நிச்சய தாம்பூலம்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.
Related Posts Plugin for WordPress, Blogger...