Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 9 ஜனவரி, 2011


உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு

இனம் ஒன்றாக மொழி வென்றாக
புது வேலை எடுப்போம் விடிவுக்கு

நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு

உடல் மண்ணுக்கு .........

பிறந்த பிள்ளை நடந்து பழக
கையில் வேலை கொடுப்போம்

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைப்போம்

யுத்த சத்தம் கேட்டால் போதும்
முத்த சத்தம் முடிப்போம்

ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றி தாமரை பறிப்போம்

எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள்
எங்கள் நிலத்தில் உரமாகும்

எங்கள் பெண்களை தொட்டவன் கைகள்
எங்கள் அடுப்பில் விறகாகும்

உடல் தமிழ் மண்ணுக்கு ..............
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
உயிர் தமிழுக்கு......................
உயிர் தமிழ் மக்களுக்கு..........

கவிதைக்கு பொருள்



கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்!

சத்தத்தினால்




சித்தத்தினால்
உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால்
எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.

கண் பார்த்ததும்,
கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்,
தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.

கண்டிப்பதால்,
என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால்,
தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.

உம் என்று சொல்,
இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல்
இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்.

உன்னோடு நன் இருந்த



உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே
தொண்ணுறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா
இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

எது நியாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதுபற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைத்தேன் ஆசையினை நீ அனைத்தாய்
ஆடை கலைத்தேன் வெட்கத்தை நீ அனைத்தாய்

கண்ட திருக்கோலம் கனவாக மறைத்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஒட்டுதடி...........................!!!

உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே
Related Posts Plugin for WordPress, Blogger...