Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

அன்னையும் தந்தையும் தானே


பாடல்: அன்னையும் தந்தையும் தானே
திரைப்படம்: ஹரிதாஸ்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
ஆண்டு: 1944

 
அன்னையும் தந்தையும் தானே பாரில்
அன்னையும் தந்தையும் தானே பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே
தாயினும் கோவிலிங்கேது
தாயினும் கோவிலிங்கேது ஈன்ற
தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
சேயின் கடன் அன்னை தொண்டு
சேயின் கடன் அன்னை தொண்டு புண்ய
தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
அன்னையும் தந்தையும் தானே
தாயுடன் தந்தையின் பாதம் - என்றும்
தலை வணங்காதவன் - நாள் தவறாமல்
கோவிலில் சென்று என்ன காண்பான்? - நந்த
கோபாலன் வேண்டும் வரந்தருவானோ?
பொன்னுடல் தன் பொருள் பூமி
பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டு
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது?
அன்னை பிதா இன்றி ஏது? - மரம்
ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
அன்னையும் தந்தையும் தானே - பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே தெய்வம்

சீரும் சிலம்பெடுத்து

என்னை தேடி காதல்




நாடகம் : காதலிக்க நேரம் இல்லை (2007)
பாடலிசை : விஜய் அந்தனி
பாடல் வரிகள் : தேன் மொழிதாஸ்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்..
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஒ..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..

யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..

தமிழா தமிழா நாளை நம் நாளே






தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

ஒண்ணா இருக்க கத்துக்கணும்



திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்ல இருக்கலாம்
உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா
……… ஒண்ணா இருக்க கத்துக்கணும்……….
தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை
…………ஒண்ணா இருக்க கத்துக்கணும்………….
கொஞ்ச நேரம் காத்தடித்து ஓய்ந்துபோகலாம்
வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்
…………….ஒண்ணா இருக்க கத்துக்கணும்……………….

நெஞ்சம் உண்டு நேர்மை



பாடல் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
திரைப்படம் : என் அண்ணன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : K.V.மகாதேவன்


நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
 

திருட்டு பயலே



திரைப்படம்:   திருட்டு பயலே
பாடல்:   திருட்டு பயலே(1)
பாடகர்கள்:   முகேஷ்
இசை:   பரத்வாஜ்
பாடல் ஆசிரியர்:   வைரமுத்து
================================================================================
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடாஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில்திருடன் தானட
உள்ளே  திருடன் தானட
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
எங்கே  மனிதன் பொய் சொன்னலும் ஆது தான் முதல் திருட்டு
எங்கே மனிதன் பொய் சொன்னலும் ஆது தான் முதல் திருட்டு

ஆசை எல்லை மீரும்பொது அனைகலை உடைகுது திருட்டு
ஆசை எல்லை மீரும்பொது அனைகலை உடைகுது திருட்டு

மன்னும் பொன்னும் பென்னும் தானாய் மனிதர்களின்  திருட்டு
இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் விடி யாத இருட்டு

திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

கங்கலா-லய் பென்மை ஒருவன் திருட நினைகிரான்
கன்னால் திருட நினைகிரான் கவிதையலே புகழ்பவன்
தமிழில் திருட நினைகிரான் தமிழால் திருட நினைகிரான்

கால்கலிலய் விழுபவன் பனிவில் திருட நினைகிரான்
பனிவால் திருட நினைகிரான் கால்கலிலய் விழுபவன் பனிவில்
திருட நினைகிரான் பனிவால் திருட நினைகிரான்

கையில் சில்லரை உல்லவன் காசில் திருடி முடிகிரான்
காசல்திருடி முடிகிரான்


பூமிகொரு கனவு இருக்கு புரியாமல் காலம் கிடக்கு
ஊலகதில் நா-லய் பெரு தொலைந்து பொகனும்
ஆந்த நாலும் பய்-ரும் இல்லா உலகம் சொர்கமாகனும்

ஊரை யைய்கும் ஓரு திருடன்
உடலை விர்கும் விபசாரி
உயிரை கொல்லும் கொலைகாரன்
உனவு தெய்டும் பிசைகாரன்
நான்கு பய்-ரும் இல்ல நாடு கனவு தானப்பா

ஆந்த நான்கு தலைகலை ஓழிக்கும் தலைவன்
கடவுல் தானப்பா உலகின் கடவுள்  தானப்பா

திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையிலும் திருடன் தானட
ஊல்லய் திருடன் தானட
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

இரவு வரும் பகலும் வரும்


படம்: இரவும் பகலும்.
பாடியவர்: டி.எம்.எஸ்.
வரிகள்: கண்ணதாஸன்.
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும்
பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

விழி இரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்று தான் பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான்
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்று தான் தெய்வம் ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான் உலகம் ஒன்று தான் 

This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா


பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா

தெய்வம் அது தாயுக்கும் கீழ தான் 
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான் 


அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான் 

வேறுங்கைய வீசிக்கொண்டு
விறகு சுமந்து வித்து
இரவா பகல்ல தினம் தினம் உளைச்சதும்
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிட்துத்தந்ததும்
பசியெ தெரியா மகனா வளத்ததும்
எத்தன தாயுங்க எங்க தமிழ் நாட்டிலெ
என் தாயும் அவளப்போல் யாரு இந்த ஊரிலெ
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா
தாயின் கால வணங்கி ஊருகிட்டுவாடா
அவதன் கோயில் அவதன் உலகம்
- பெத்த மனசு


மண்ணில் வரும் செடிகொடிகள்
எவளவு வகைகள் தான்
மரமோ கொடியோ தண்ணி மட்டும்
ஒன்றே தான் ஒண்ணெதான்
பலவித ம்மரங்கள் என்ன
மரத்தில் பழங்கள் என்ன
நிறத்தில் ருசியில் ஒவ் ஒன்ரும் வேறதான்
பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா
காயாய் இருப்பதல் கொய்ய கசக்குமா
நல்ல வயிர்ரில் பிறந்தா நல்லவனே
தாண்டா கெட்டது செய்ய மாட்டான்
வல்லவனெ தாண்டா
அவனே மனிதன் அதை நீ உணரு

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா
தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான் 

ஒரு கூட்டு கிளியாக,



படம் : படிக்காதவன்
பாடல் : ஒரு கூட்டு கிளியாக
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.
ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கல்
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

மனிதா மனிதா இனி உன்


மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

காசிக்கு போகும் சந்நியாசி

திரைப்படம்:சந்திரோதயம்
பாடியவர்கள்:சௌந்தரராஜன், கோவிந்தராஜன்
இயற்றியவர்:வாலி
இசையமைத்தவர்கள்:எம்.எஸ்.விஸ்வநாதன்

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்கு போகும் பரதேசி...
கங்கைக்கு போகும் பரதேசி
நீ நேத்துவரையிலும் சுகவாசி

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
பட்டது போதும் பெண்ணாலே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும்
சிவ சிவ சிவனே
சிவ சிவ சிவனே
ஆ... சிவனே ஆ...
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி

அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
தலைஅணை மந்திரம் மூளையை தடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்

பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்

காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை

சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
அவள் துணையினை பிரிவது முறையோ
பகைதான் வளரும்
பகையே அன்பாய் மலரும்
பிரிந்தவர் இணைந்திட படுமோ
மணந்தவர் பிரிந்திட தகுமோ
இல்லறம் நல்லறமே

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

புதியதோர் உலகம் செய்வோம்


திரைப்படம்:சந்திரோதயம்

இசையமைத்தவர்கள்:எம்.எஸ்.விஸ்வநாதன்

புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய)

பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய)

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)

தர்மம் தலை காக்கும்


தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்

செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது.....


திரைப்படம்: குடும்பத் தலைவன்
நடிகர்கள்: எம்.ஜி. ராமச்சந்திரன், சரோஜாதேவி, எம்.ஆர். ராதா, எம்.என். நம்பியார், S.A. அசோகன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1962


மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
ஓஹோஹோஹோஹொஹொஹோ

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
ஓஹோஹோஹோஹொஹொஹோ

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

முத்தைத் தரு பத்தித்




ராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான

*........பாடல்.......

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

thanks to http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=946&mode=Language&Language=0

பூமியில் மானிட ஜென்மம்


பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..ஓஊ...
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காலமும் செல்லமடிந்திடமோ
காலமும் செல்லமடிந்திடமோ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிரந்தோம்...ஓஊ....
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிரந்தோம்
சத்திய ந்யான டயானிதியாகிய
சத்திய ந்யான டயானிதியாகிய
புதரை போற்றுதல் நம் கடனே
புதரை போற்றுதல் நம் கடனே

உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே
உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே
மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே
மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே எம்.கே.தியாகராஜபாகவதர்

திரைப்படம்:   அசோக்குமார்
பாடல்:   பூமியில்மாநிடஜன்மம்
பாடகர்கள்:   MK. த்யாகராஜ பாகவதர்
இசை:   பழையது
பாடல் ஆசிரியர்:   பாபநாசம் சிவன் 
Related Posts Plugin for WordPress, Blogger...