Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அன்பே சிவம்


யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
யார் யார் சிவம் நீ நான் சிவம்

யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

யார் யார் சிவம் நீ நான் சிவம்
அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

படம் : அன்பே சிவம்
இசை : வித்யாசாகர்
குரல் : கமல்ஹாசன்&குழு

கல்லை மட்டும் கண்டால்



கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் கழியாது
அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீரவைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது

ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா

சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது



படம்: தசாவதாரம்
இசை: ஹிமேஷ் ரேஷ்மய்யா
பாடியவர்: ஹரிஹரன்

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா


தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி

ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்க்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும்போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே லலலா லலலா
தாளமிங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
என் கதை எழுதிட மறுக்குது அ அ ஆ அ அ ஆ
ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன திரிந்து
இரவுதோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன திரிந்து
இரவுதோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது

இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே

பாவமுண்டு பாவமில்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

அ அ அ அ அ அ அ அ அ அ

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுத்தது என் பேனா
ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியி்ல் ஜதியில் எனது தில்லானா

தீர்த்தக் கரையினிலே... (கண்ணம்மா - என் காதலி)



....வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த இடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!....


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!

(தீர்த்தக் கரையினிலே...)

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் நகரத் துழலுவதோ?

(தீர்த்தக் கரையினிலே...)

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் காவலுன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள்

(தீர்த்தக் கரையினிலே...)

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி!

தோல்வி நிலையென நினைத்தால்..



தோல்வி நிலையென நினைத்தால்..மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா..

படம் : ஊமை விழிகள்
பாடியவர் : பி.பி சினிவாஸ்
இசை : மனோஜ் ஜியன்
விரும்பி கேட்டவர் : கார்செழியன்

நறுமுகையே நறுமுகையே


நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள்
என் மார்த்துளைத்ததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே..

யாயும் யாயும் யாராகியறோனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)

படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ

அன்பென்ற மழையிலே



அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே

கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே... அதிரூபன் தோன்றினானே..

போர்க்கொண்ட பூமியில் தூக்காடு காணவே
புகழ் மைந்தன் தோன்றினானே.....

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே

நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாக தோன்றினானே

இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவே
நிறைபாலன் தோன்றினானே

முட்க்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவி ராஜன் தோன்றினானே.....

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே..

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே...

படம்: மின்சாரக் கனவு
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: அனுராதா ஸ்ரீராம்

மடை திறந்து தாவும் நதியலை



மடை திறந்து தாவும் நதியலை நான் 
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது..


காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்..

மடை திறந்து..



நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்..

மடை திறந்து


படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்





மக்களுக்கு நீ எடுத்து சொல்லு
dam it’s going to blow
தாவும் நதியலை நான்
baby u should know
கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது
dam it’s going to blow
தாவும் நதியலை நான்
baby u should know
கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது

என் உரை துவங்கு முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி தாயே ~ நீ இடு ~தங்கி தந்தை நீயோ ~சுமைதாங்கி
பசி கொடுமை நடை பதில் உறக்கம்
ஆசை கிடத்தில் ~காரணம் இறைவனின் இறக்கம்
எத்தனை ஏமாற்றம் அணு தினம் அவமானம்
எதையும் தாங்கும் உள்ளம் தொடரும் இசை பயணம்
தொலைவு வானம் போடா வேண்டாம் நட்சத்திரம்
தொடர்ந்து போராடும் கலைஞனின் மணம்
தோட்டாக்கள் துளைக்காது அணு குண்டு தகர்க்காது
அவமானம் என் உயிரை அளிக்காது
அடி கரம் என் கனவை தடுக்காது
கறுப்பின சொல் இசை மிதம் கிடக்கட்டும்
செத்தபின் சொலி இசை செல்வந்தன் பிறக்கட்டும்
ரெக்கை கூண்டில் விருப்பங்கள் இனி நிகழும்
பிராமகவைக்கும் பாட்டை இனி தொடரும்
புதிய பரிமாண படை எடுப்போம்
நட்சத்திரங்களின் ஜனனமத்தை முடிவு எடுப்போம்
dam it’s going to blow —– (2)

அங்கர தாண்டுவோம் மட்மஜோதில் ~அடையும் நேரம்
ஆய திரு முகம் சென் நிரும்புலீ கொண்டு கர்ப்பம்
அந்த சராசரம் அடங்கி அலம்பல் வாய் தளம் .
சுத்தம் நிலவாது அதிக படிக நட்பு ன்லபே கொலபே செதபே பத்பே செதபே சுமந்து தென்ன மரம் ஆக நாங்க நீக்க
விடபே விடபே விடபே விடபே உன் கருணை கலைவாணி
இசை தாயே கலை அருள் தா நீ
உள்ளை நீதி இந்த ராப் பாடத்தில் ஆகா மொத்தத்தில்
பசுதொப்போல் தீய புலி அணிந்தவனுக்கு உன்ன
வி லை வல்லவன் மனதில் ஆசை கோட்டை கட்டி போழுளுடுபோக்கு அவன் இவன் பாது வெட்டி பேச்சு பேச்சுக்கு என்னடா பேச்சு பசங்கள இப்போ என்னடா ஆச்சு வந்த நாசிக்கள் கை கோடி சேர்த்தது வருமோ தெரியாது வல்லவனின் மறு பகுதி அண்ணனே புகழ் கீடு படம் விடும் தொடங்குமே இது ஒரு
நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்
எவனுக்குமே தெயர்யது , ஒனக்கு சொன்னால் புரியாது
now to take you back flashback when i was just little
My senti couple next to a corny temple.
i was a இங்க குண்டு பைய …எங்க அப்பா அப்பா செல்லம் ஒட்டகம் மாறி போனோம் .என்னை மலை வந்த வெல்லும் .
புதிய பழைய உலகுகள் மாற .. ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மோத
கண்டு புடிசெண்டா இந்த hip hop
அன்று முதல் இன்று வரை மார்க்கெட் dont stop
market dont quit சோதனை வேதனை என் கண்ணீர் துடைக்க அப்பம் தும்பிக்கை என் நம்பிக்கை
கோலாலம்பூர் ho….சென்னை லண்டன் தமிழன் mc முதல்வன் வல்லவன் ராப் இசை கலை விதீன் சம்ப்ரதாயம்
மடை திறந்து நாடி அலை புலி க போல் நீ தாவும்

கடவுள் தந்த அழகிய வாழ்வு



கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்


அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஓ ஓ ஓஓஒ.....


பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..




எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
ஓஓஒ ஓஒ
பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே


கடவுள் தந்த..


நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்


வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே
கேளடி
கடவுள் தந்த அழகிய வாழ்வு.

படம்: மாயாவி
பாடியவர்கள்: எஸ்பிபி, சரண், கல்பனா
இசை: தேவி SRI பிரசாத்

வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

வந்தே...


ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே

வந்தே...

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
வந்தே...

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
வந்தே...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
வந்தே...

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

வந்தே...

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
வந்தே...

உனக்கென்ன மேலே



உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா
நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே..

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா
நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே..

படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

ஒவ்வொரு பூக்களுமே...



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..

ஒவ்வொரு..


ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மலையோ.. அது பனியோ..
நீ மோதிவிடு..

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே..
ஒவ்வொரு...

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு..

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்..
மனமே...

வானவில்லே வானவில்லே



வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளிவந்து வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்னபறவைகள் கொஞ்சி பறக்குதே வண்ணச் சிறகிலே தண்ணிர் தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ (வானவில்லே...)

எந்த நாட்டு குயிலின் கூட்டமும் பாடும் பாடல் சோகம்
எந்த நாட்டு கிளிகள் பேச்சிலும் கொஞ்சும் மழலை உண்டு
சாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா
தேசமென்ன பார்த்துவிட்டு மண்ணில் மழை வருமா
உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே (வானவில்லே..)

மேக மூட்டம் கொஞ்சம் விலகவே மண்ணில் நிலவு கண்டேன்
அன்பு பொழியும் கருணை வெள்ளத்தில் நெஞ்சம் மூழ்க நின்றேன்
உன்னை போலே சிலர் இருந்தால் மண்ணில் சுவர்க்கம் வருமே
இயற்கை அன்னை படைத்ததெல்லாம் பொதுவினில் வருமே
மூங்கில் காடெல்லாம் சங்கீதம் பாடாதோ தென்றலின் சொர்கத்திலே (வானவில்லே..)



பாடல்: வானவில்லே வானவில்லே
திரைப்படம்: ரமணா
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: பழநி பாரதி
பாடியவர்: சாதனா சர்கம்

ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
பருவம் என்னும் காட்டிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்...
இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

சந்தோசம் , சந்தோசம்


Watch Youth - Santhosham in Entertainment | View More Free Videos Online at Veoh.com
சந்தோசம் , சந்தோசம் , வாழ்கையின் பாதி பலம் ,
சந்தோசம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்
புயல் மையம் கொண்டால் , மலை மண்ணில் உண்டு ,
எந்த தீமை குள்ளும் ? சிறு நன்மை உண்டு , ஒ -ஒ -ஒ .

வெற்றியை போலவே , ஒரு தோல்வியும் நல்லதடி ,
வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி ,,
குற்றஞ் சொல்லாமல் , ஒரு சுற்றம் இல்லையடி ,
இலையும் புன்னகையால் , நீ இருட்டுக்கு வெள்ளையடி ,
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் ,
நாகரிகம் பிறந்ததடி ,
தவறுகள் குற்றம் அல்ல , சரிவுகள் வீழ்ச்சி அல்ல ,
பாடம் படி பவள கொடி ,
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை ,
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் , நாளை துன்பம் இல்லை ,

ஆதியில் ஆண்டவன் , இந்த பூமியை படைத்தானே ,
அவன் ஆசையை போலவே , இந்த பூமி அமையில்லையே ,
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய் விடில் ,
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா ?
நன்மை என்றும் தீமை என்றும் நாலு பேர்கள் சொல்லுவது ,
நம்முடைய பிழை இல்லையே ,
துன்பம் என்ற சிர்பிக் குள் தான் இன்பம் என்ற முத்து வரும் ,
துணிந்த பின் பயம் இல்லையே ,
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள் ,
காலுக்கு செருப்பு எப்படி வந்தது ? முள்ளுக்கு நன்றி சொல்

புதுமைப் பெண்

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!

முரசு



வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு
தெவ்ம் துணைசெய்ய வேண்டும்.

வேத மறிந்தவன் பாப்பான்,-பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்,
நீதி நிலைதவ றாமல்-தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.
தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

நாலு வகுப்பும்இங் கொன்றே-இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்,
வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே-மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை.

ஏவல்கள் செய்பவர் மக்கள்;-இவ்
யாவரும் ஓர்குலம் அன்றோ!
மேவி அனைவரும் ஒன்றாய்-நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.

சாதிப் பிரிவுக் சொல்லி-அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்
பெதைமை யற்றிடுங் காணீர்.

தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:

யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெவ்ம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்
மானுடர் வேற்றுமை யில்லை,
எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

நிகரென்று கொட்டு முரசே!-இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

அன்பென்று கொட்டு முரசே-அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவும் போகும்-வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.

அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

உடன்பிறந் தாக்ளைப் போல-இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில்-இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

மரத்தினக நட்டவன் தண்ணீர்-நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம்,-இங்கு
சேர்ந்த உணவெலை யில்லை.

வயிற்றுக்குச் சொறுண்டு கண்டீர்!-இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!-பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

உடன்பிறந் தவர்களைப் போலே-இவ்
வுலகினில் மனிதரெல் லோரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை-இங்கு
தின்று பிழைத்திட லாமோ?

வலிமை யுடையது தெய்வம்,-நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை-தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ?

தம்பிசற் றேமெலி வானால்-அண்ணன்
தானடி மைகொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி-மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

அன்பென்று கொட்டு முரசே!-அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியாரை மேம்படச் செய்தால்-பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

பாருக்குள் ளேசமத் தன்மை-தொடர்
பற்றுஞ் சதோதரத் தன்மை,
யாருக்கும் தீமைசெய் யாது-புவி
யெங்கும் விடுதலை செய்யும்.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!-இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

பாப்பாப் பாட்டு


ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!

மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

சென்றது மீளாது

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

கடமை அறிவோம்

கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.

மாயையைப் பழித்தல்

ராகம்-காம்போதி தாளம்-ஆதி உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே!-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!-மாயையே!

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே! நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் மாயையே!

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணர் துரரை யென்
செய்வாய் மாயையே!

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!
என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

மனப் பீடம்

பல்லவி

பீடத்தி லேறிக் கொண்டாள்-மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.

சரணங்கள்

நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு கூடக் கருது மொளி
மாடத்தி லேறி ஞானக்ச கூடத்தில் விளையாடி
ஓடத் திருந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்,
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து
வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தே
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
எண்ணத்துதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
பெண்ணி லரசியிவள் பெரிய எரி லுடையாள்
கண்ணுள் கணியெனக்குக் காத லிரதியிவள்
பண்ணி லினிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணு மிதழமுற ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)

கண்ணம்மாவின் காதல்



காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;-அமு
தூற்றினை யொத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனிம்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக் (காற்று வெளி)

நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த
நேரமும் நின்தன்ப் போற்றுவேன்-தயர்
போயின போயின துன்பங்கள்-நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்தன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென் றபேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!-என்தன்
சிந்தனையே என்தன் சித்தமே!-இந்தக் (காற்று வெளி)

வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டி னேனுக் கருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,
பாரில் வெற்ற எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்
காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே.

மஹா சக்தி

சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்;
இந்திரி யங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்;
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.

பேதை நெஞ்சே!

இன்னுமொரு முறைசொல்வேன்,பேதை நெஞ்சே!
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!
பின்னையொரு கவலையுமிங் கில்லை,நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்!

நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
நினைத்தபயன் காண்பதவன் செய்கையன்றோ?
மனமார உண்மையினைப் புரட்டலாமோ?
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?
எனையாளும் மாதேவி,வீரார் தேவி,
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே!

சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;
சங்கரனென் றுரைத்திடுவோம்,கண்ணன் என்போம்;
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,
நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,
பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,.
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய்,நெஞ்சே!

செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;
கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்.
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
ந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்.
‘நமோநமஓம் சக்தி’ யென நவிலாய் நெஞ்சே!

பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;
பயனனிறி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டதுநீ பெற்றிடுவாய்,ஐயமில்லை;
கேடில்லை,தெய்வமுண்டு,வெற்றி யுண்டு;
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சதி,
நாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்;
‘நமோநம,ஓம் சக்தி‘ யென நவிலாய் நெஞ்சே!

சக்தி

துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி;
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி;
பாம்பை அடிக்கும் படையே சக்தி;
பாட்டினில் வந்த களியே சக்தி;
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.


வாழ்வு பெருக்கும் மமதியே சக்தி,
மாநிலம் காக்கும் மதியே சக்தி;
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை யளக்கும் விரிவே சக்தி;
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி.

ஓம் சக்தி

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும்"என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு
சொல்லு மவர்தமை யே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும்"சக்தி"யென் றாலுனைக்
கும்பிடு வேன்,மன மே!
அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்ச மில்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை
அத்தனை யுங்களைந் தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை,காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்!

தொண்டு செய்யும் அடிமை

நந்தனார் சரித்திரத்திலுள்ள"மாடு தின்னும் புலையா!-உனக்கு மார்கழித் திருநாளா?"
என்ற பாட்டின் வர்ண மெட்டு

1.
தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச்
சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப்
பாத்திர மாவாயோ? (தொண்டு)

2.
ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்!-கண்முன்
நிற்கொ ணாது போடா! (தொண்டு)

3.
அச்சம் நீங்கி னாயோ?-அடிமை!
ஆண்மை தாங்கி னாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை
பேணுத லொழித் தாயோ? (தொண்டு)

4.
கப்ப லேறு வாயோ?-அடிமை!
கடலைத் தாண்டு வாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே-அடிமை!
கொற்றத் தவிசுமுண் டோ? (தொண்டு)

5.
ஒற்று மைபயின் றாயோ?-அடிமை!
உடம்பில் வலிமையுண் டோ?
வெற்றுரை பேசாதே!-அடிமை!
வீரியம் அறிவாயோ? (தொண்டு)

6.
சேர்ந்து வாழு வீரோ-உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ? (தொண்டு)

7.
வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ளது சொல்வேன் கேள்-சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா! (தொண்டு)

8.
நாடு காப்ப தற்கே-உனக்கு
ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா!-அடிமை!
வேலை செய்யப் போடா; (தொண்டு)

9.
சேனை நடத்து வாயோ?-தொழும்புகள்
செய்திட விரும்பாயோ?
ஈன மான தொழிலே உங்களுக்கு
இசைவதாகும் போடா!

நடிப்புச் சுதேசிகள் பழித்தறிவுறுத்தல் கிளிக் கண்ணிகள்

நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே!
வாய்ச் சொல்லில் வீர ரடீ 1


கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே!
நாளில் மறப்பா ரடீ! 2


சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே
அலிகளுக் கின்ப முண்டோ? 3


கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்ட மடி!-கிளியே!
பேசிப் பயனென் னடீ! 4


யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர்
மந்திரத் தாலே யெங்கும்-கிளியே!
மாங்கனி வீழ்வதுண் டோ? 5


உப்பென்றும் சீனி என்றும் உள் நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ!-கிளியே!
செய் தறியா ரடீ! 6


தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால்!-கிளியே
நம்புத லற்றா ரடீ! 7


மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயி ரைக்-கிளியே
பேணி யிரந்தா ரடீ! 8


தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக்!-கிளியே!
அஞ்சிக் கிடந்தா ரடீ! 9


அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறும தியும்
உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே!
ஊமைச் சனங்க ளடீ! 10


ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும்-கிளியே!
வாழத் தகுதி யுண்டோ? 11


மானம் கிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்-கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ? 12


சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல்,
வந்தே மாதர மென்பார்!-கிளியே!
மனதி லதனைக் கொள்ளார் 13


பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை!-கிளியே!
பாமர ரேதறி வார்! 14


நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விரப்புங் கொண்டே!-கிளியே!
சிறுமை யடைவா ரடீ! 15


சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்,
சிந்தை இரங்கா ரடீ-கிளியே!
செம்மை மறந்தா ரடீ! 16


பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!-கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ! 17


தாயைக் கொல்லும் பஞ்சத்தைக் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா!-கிளியே!
வந்தே மாதர மென்பார்! 18

சுதந்திர தாகம்



என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னை கை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ? 1

பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ
அஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி!ஆரியர் கோனே!

சுதந்திரப் பள்ளு



ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே;ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று (ஆடுவோமே)
சரணங்கள்

1.
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடுவோமே)

2.
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு;
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே (ஆடுவோமே)

3.
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி
நல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)

4.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம் (ஆடுவோமே)

5.
நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடுவோமே)

சுதந்திரம்

விடுதலை! விடுதலை! விடுதலை!
1.
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை;
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுலை;
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில்பு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை! (விடுதலை)

2.
ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
மான மாக வாழ்வமே! (விடுதலை)

3.
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே! (விடுதலை)

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். 1

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

பாரத சமுதாயம்

பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய (பாரத)
அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)
சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கம்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின் றித்தரு நாடு-இது
கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
கணக்கின் றித்தரு நாடு-வாழ்க! (பாரத)

2.
இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)

3.
"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்;

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க! (பாரத)

4.
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க

போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்

போகின்ற பாரதத்தைச் சபித்தல்

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஓ டுங்கினாய் போ போ போ
பொலிவி லாமு கத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனினாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ 1.

இன்று பார தத்திடை நாய்போலே
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யா கச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ 2

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறியவீடு கட்டுவாய் போ போ போ 3

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத் தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ 4


வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல்ந டையினாய் வா வா வா 5

மெய்மை கொண்ட நூலையே அன்போடு
வேத மென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே,நங்கள் சீர்த்
தேச மீது தோன்றுவாய் வா வா வா 6

இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரி லாவ லத்தினாய் வா வா வா
ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
களைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல்
விழியி னால்வி ளக்குவாய் வா வா வா 7

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா

வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

1. ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

தொழில்

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!

மண்ணெ டுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள் களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்துட வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே!

ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு

விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே!
களக்க முற்ற இருள்கடந் தேகுவார்
காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே;

துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்
தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்;
களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டொரு
காலம் நீர் சென்று தேடிய தில்லையோ?

அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே
ஆசை யென்றவிண் மீன்ஒளிர் செய்ததே;
துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால்,
சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்;

நின்ற விந்தன நுங்கள் விளக்கெலாம்;
நீங்கள் கண்ட கனாக்களெல் லாம்இசை
குன்றித் தீக்குறி தோன்றும்;இராப்புட்கள்
கூவு மாறொத் திருந்தன காண்டிரோ?

இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்
ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்
இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்
ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்
முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலி
முறைமு றைபல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்குவந் தெய்திய பேரொலி
போல மந்திர வேதத்தின் பேரொலி.

“இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,
இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்”
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தநீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே.

புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது,

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது,பாவந் தொலையுது,
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!
தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது.

காலைப்பொழுது

காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.

கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே.

தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே.

தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்
னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே.

தென்னைப் பசுங் கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே.

வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென் திசையில்
கன்னங் கருங்காகக் கூட்டம்வரக் கண்ட தங்கே.

கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே.

சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர்கிளைமேல்

வீற்றிருந்தே“கிக் கிக்கீ;காக்காய் நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவ தென்னே?:”

என்றவுட னே காக்கை-“என் தோழா! நீ கேளாய்,
மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகிறேன்.”

என்றுசொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கணோர்
மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே.

“நட்புக் குருவியே ஞாயிற்’றிளவெயிலில்
கட்புலனுக் கெல்லாம் களியாகத் தோன்றுகையில்,

நும்மை மகிழ்ச்சிடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!
அம்மவோ!காகப் பெருங்கூட்ட மஃதென்னே?”

என்று வினவக் குருவிதான் இஃதுரைக்கும்;-
“நன்றுநீ கேட்டாய்,பசுங்கிளியே!நானுமிங்கு.

மற்றதனை யோர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்;
கற்றறிந்த காக்காய்,கழறுக நீ!” என்றதுவே.

அப்போது காக்கை,“அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர்,சில நாளாக் காக்கையுள்ளே.

நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீ ரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின்மேற் கண்டீரே?

மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;

ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கிவிட்டான்.

சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை;துன்பமில்லை;
போற்றற் குரியான் புதுமன்னன்,காணீரோ?”

என்றுரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னமொன்று
தென்திசையி னின்று சிரிப்புடனே வந்ததங்கே.

அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து,-“வாழ்க,துணைவரே!

காலை யிளவெயிலிற் காண்பதெலாம் இன்பமன்றோ?
சால நுமைக் கண்டுகளித்தேன் சருவிநீர்,

ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்?” என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம்.

அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்;-“ஆங் காணும்!
மன்னர் அறம்புரிந்தால்,வையமெல்லாம் மாண்புபெறும்.

ஒற்றுமையால் மேன்மையுண்டாம்; ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?”

என்று சொல்லி அன்னம் பறந்தாங்கே ஏகிற்றால்;
மன்று கலைந்து மறைந்தனவப் புட்களெல்லாம்.

காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை;
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத் தோம்.

மழை

திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

புயற் காற்று

நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு
ஒரு கணவனும் மனைவியும்

மனைவி: காற்றடிக்குது,கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.

கணவன்: வானம் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.

மனைவி:நேற்றிருந் தோம்அந்த வீட்டினிலே,இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றெனவந்தது கூற்றமிங்கே,நம்மைக்
காத்ததுதெய்வ வலிமையன்றோ?

பிழைத்த தென்னந் தோப்பு

வயலிடை யினிலே-செழுநீர்-மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை-தனியே-ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித் ததிலே-மரங்கள்-கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே-சிதறி-நாடெங்கும் வீழ்ந்தனவே.

சிறிய திட்டையிலே,உளதோர்-தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை-அதனை-வாயு பொடிக்க வில்லை

வீழ்ந்தன சிலவாம்-மரங்கள்-மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை-வாயு பொறுத்து விட்டான்

தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில்,-அது தேம்-பாகு மதுர மன்றோ?

இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்பவொளித்திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே

அழகுத் தெய்வம்

மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன்.
யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?’என்றேன்;
‘யோகமே தவம்,தவமே யோக’மென உரைத்தாள்.
‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?’என்றேன்;
‘இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்’என்றாள்.
‘தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?’என்றேன்.
‘வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ?”என்றாள்.
‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?’என்றேன்.
‘காலமே மதியினுக்கோர் கருவியாம்’என்றாள்.
‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’என்றேன்;
‘நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’என்றாள்
‘ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?’என்றேன்;
‘எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’என்றாள்.
‘மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?’என்றேன்;
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

ஒளியும் இருளும்

வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!

சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!

தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே!

நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!

மது

போகி

பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே
இச்சை தீர மதுவடித் துண்போம்;
இஃது தீதென் றிடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைபோம்;
கொஞ்சு மாரும் கூட்டுணும் கள்ளும்
இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ?

யோகி

பச்சை முந்திரி யன்ன துலகம்;
பாட்டுப் பாடடல் சிவக்களி எய்தல்;
இச்சை தீர உலகினைக் கொல்வோம்;
இனிய சாறு சிவமதை உண்போம்;
கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ?
கொஞ்சு மாதொரு குண்டலி சக்தி
இச்சகத்தில் இவையின்ப மன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ?

போகி

வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி
வேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயத்தே
உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்;
சுற்று தேங்கமழ் மென்மலர் மாலை
தோளின் மீதுருப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித்
தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம்.

யோகி

வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்;
வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்;
ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம்
உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்;
மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்;
வண்ம லர்நறு மாலை தெளிவாம்!
சுற்றி மார்பில் அருள்மது வுண்டே
தோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம்.

போகி

நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகைமுக மாதர்
அல்லல் போக இருடன் கூடி
ஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்;
சொல்ல நாவு கனியுத டாநற்
சுதியிலொத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும்
போகம் போலொரு போகமிங் குண்டோ?

யோகி

நல்ல கீதம்,சிவத்தனி நாதம்,
நடன ஞானியர் சிற்கபை யாட்டம்;
அல்லல் போக இவருடன் சேர்ந்தே
ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்;
சொல்ல நாவில் இனிக்கு தடா!வான்
சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும்
செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ?

ஞானி

மாத ரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
களில் இன்பம் கலைகளில் இன்பம்,
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம்
யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம்
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே.

இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தே
இச்ச கத்தின் இயல்வலி யாகி
முன்பு பின்பல தாகியெந் நாளும்
மூண்டு செல்லும் பராசக்தி யோட
அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத்
தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்,
துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார்
துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே.

இச்சகத்தோர் பொருளையுந் தீரர்
இல்லை யென்று வருந்துவதில்லை;
நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு
நானிலத்தின்பம் நாடுவதில்லை;
பிச்சை கேட்பது மில்லை;இன்பத்தில்
பித்துக் கொண்டு மயங்குவ தில்லை;
துச்ச மென்று சுகங்களைக் கொள்ளச்
சொல்லு மூடர்சொற் கேட்பதும் இல்லை.

தீது நேர்ந்திடின் அஞ்சுவ தில்லை.
தேறு நெஞ்சினொ டேசிவங் கண்டோர்;
மாதர் இன்பம் முதலிய வெல்லாம்
வைய கத்துச் சிவன் வைத்த வென்றே
ஆத ரித்தவை முற்றிலும் கொள்வார்;
அங்கும் இங்குமொன் றாமெனத் தேர்வார்;
யாது மெங்கள் சிவன்திருக் கேளி;
இன்பம் யாவும் அவனுடை இன்பம்.

வேத மந்திர நாதம் ஒருபால்
வேயி னின்குழல் மெல்லொலி ஓர்பால்,
காதல் மாதரொ டாடல் ஒருபால்,
களவெம் போரிடை வென்றிடல் ஓர்பால்,
போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்,
பொலியுங் கள்வெறி துய்த்தல்மற் றோர்பால்;
ஏதெ லாம்நமக் கின்புற நிற்கும்
எங்கள் தாய்அருட் பாலது வன்றே.

சங்கீர்த்தனம்
மூவரும் சேர்ந்து பாடுதல்

மதுநமக்கு,மதுநமக்கு,மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு,மதுவெனக் கதித்தலால்;
மதுநமக்கு மதியுநாளும்,மதுநமக்கு வானமீன்,
மதுநமக்கு,மண்ணுநீரும் மதுநமக்கு,மலையெலாம்,
மதுநமக்கொர் தோல்விவெற்றி,மதுநமக்கு வினையெலாம்,

மதுநமக்கு,மாதரின்பம்,மதுநமக்கு மதுவகை;
மதுநமக்கு,மதுநமக்கு,மதுமனத்தொடாவியும்
மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால்.

சந்திரமதி

ஆதிபச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;-என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ!

பேச்சுக் கிடமே தடி!-நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி!நினை விழந்தேனடி!

நீலக் கடலினிலே-நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
காதல் விளங்குதடி! (பச்சைக் குழந்தை யடி!)

கண்ணம்மா-என் காதலி



பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!

கண்ணன்-என் ஆண்டான்

தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பார முனக் காண்டே!
ஆண்டே!-பாரமுனக் காண்டே!

துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குறித்து நின்
ஆணை வழி நடப்பேன்;
ஆண்டே-ஆணைவழி நடப்பேன்.

சேரிமுழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள் பாடிடுவேன்?
பேரிகை கொட்டித் திசைக ளதிர நின்
பெயர் முழுக்கிடுவேன்;
ஆண்டே!-பெயர் முழக்கிடுவேன்.

பண்ணைப் பறையர்தங் கூட்டத்தி லேயிவன்
பாக்கிய மோங்கி விட்டான்;
கண்ணனடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற் றங்கு வந்தேன்;
ஆண்டே! காதலுற் றிங்கு வந்தேன்;

காடு கழனிகள் காத்திடுவன்,நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே!-பக்குவஞ் சொல்லாண்டே!

தோட்டங்கள் மொத்திச் செடி வளர்க்கச் சொல்லிச்
சோதனை போடாண்டே!
காட்டு மழைழக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
கட்டியடி யாண்டே!
ஆண்டே!-கட்டியடி யாண்டே!

பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே?
உபகாரங்கள்-ஆகிட வேண்டுமையே!

மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி
வாங்கித் தரவேணும்;
தானத்துகுச் சில வேட்டிகள் வாங்கித்
தரவுங் கடனாண்டே!
சில வேட்டி-தரவுங் கடனாண்டே!

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
யொரு சில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் -தொலைத்திட வேண்டுமையே!

பேயும் பிசாசுந் திருடரு மென்றன்
பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும்-வழிசெய்ய வேண்டுமையே!

வாணியை வேண்டுதல்

தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர
மொழிந்திடுதல்;சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
காட்டல்,கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்,இங் கியெல்லாம்
நீ அருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ! அடியனேற்
கிவையனைத்தையும் உதவு வாயே.
Related Posts Plugin for WordPress, Blogger...