Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 5 பிப்ரவரி, 2011

பல்லாக்கு வாங்க



திரைப்படம்:பணக்கார குடும்பம்.
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன்

பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக


மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
அதை மண் மீது போட்டுவிட்டேன்
வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக

மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வதுமட்டும்
என் வசமில்லை..என் வசமில்லை .............பல்லாக்கு.............

கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம்..வாழ்வது பாவம் ...........பல்லாக்கு..................

ஒன்று எங்கள் ஜாதியே

திரைப்படம்:பணக்கார குடும்பம்.
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி


ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும் (2)
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே (2)


ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
(ஒன்று )

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
(ஒன்று )

எங்க வீட்டுப் பிள்ளை 

வெள்ளி பனிமலை

ஏய் எத்தனையோ சித்தனுங்க



ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்ன் தெல்லாம் போறலியா
மொத்தமாக காதுல தான் ஏறலியா

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆன்டவன் அந்த மதம்.

அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா

கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா

அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா முஸ்லிமா இல்லை இந்துவா

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்.....

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா

மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா

அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே

நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல என்னு
பொயையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பன்னு


சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா

அட உன்னதா நம்புறன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......

கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா

கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா

இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது


அடியே ஞானத்தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதைப் பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்

அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......

இந்த பாடலின் "ஆடியோ இங்கே கேளுங்க.."

படம்: ராமன் அப்துல்லா
பாடல்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
குரல்: நாகூர் E.M.HANIFA
இயக்கம்: பாலுமகேந்திரா
வருடம்:1997

சொல்லாதே யாரும் கேட்டா



சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
யேய்.........சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
மூடி வச்ச கதவுக்குள்ள சொர்கத்துக்கு வழி இருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டா நூறு வழி தொண இருக்கு
பாடம் பள்ளியறைப் பாடம்
பாடும் இன்ப சுரம் பாடும்

சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
யேய்.....யேய்....சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
மூடி வச்ச கதவுக்குள்ள சொர்கத்துக்கு வழி இருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டா நூறு வழி தொண இருக்கு
பாடம் பள்ளியறைப் பாடம்
பாடும் இன்ப சுரம் பாடும்

ஊரும் ஒலகமும் ஓய துடிக்கிற நேரம்
நாடி நரம்புகள் பாயத் துடிக்கிற காலம்
வாடி வார்த்த இப்ப தேவ இல்ல
வாதாட இப்ப நேரம் இல்ல
சூடாக ஆக்கி வச்ச சாப்பாடு
வீணாக ஆறிப்போகக் கூடாது
சூடாக ஆக்கி வச்ச சாப்பாடு
வீணாக ஆறிப்போகக் கூடாது
எல போடாமலே பசிதான் தீருமா
பசி தீராமலே ருசிதான் ஏறுமா

ஸ்ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
யேய்.....யேய்....சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
மூடி வச்ச கதவுக்குள்ள சொர்கத்துக்கு வழி இருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டா நூறு வழி தொண இருக்கு
பாடம் பள்ளியறைப் பாடம்
பாடும் இன்ப சுரம் பாடும்

பஞ்சு தலயணை கெஞ்சி அழைக்கிறபோது
சின்னஞ்சிறுசுக்கு நித்திரை என்பது ஏது
நூலாட மெல்ல வெளியேறட்டும் ..ஹ ஹா ஹ
பூமெனி இன்பக் கத பேசட்டும்
பஞ்சாங்கம் பாக்க இப்பக்கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது
பஞ்சாங்கம் பாக்க இப்பக்கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது
இரு கொடி போலவே உடல் வெளயாடட்டும்
அதிகாலை வரைகாமன் கொடி ஏறட்டும்
ஹ அஹா ஹா ஹா ஹா

சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
யேய்.....யேய்....சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
மூடி வச்ச கதவுக்குள்ள சொர்கத்துக்கு வழி இருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டா நூறு வழி தொண இருக்கு
பாடம் பள்ளியறைப் பாடம்
பாடும் இன்ப சுரம் பாடும்
சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே ஹான் ஹா ஹா
சொல்லாதே ஹும்ம் யாரும் கேட்டா ஹு ஹு ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்

திரைப்படம் : சொர்க்கம்
பாடலாசிரியர் :கவியரசு கண்ணதாசன்
குரல் : T.M.சௌந்தராஜன்
இசை :M.S.விஸ்வநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்திய நாடு என் வீடு



திரைப்படம் : பாரத விலாஸ்
பாடலாசிரியர் :கவிஞர் வாலி
குரல் : T.M.சௌந்தராஜன், M.S.விஸ்வநாதன், P.சுசீலா, L.R.ஈஸ்வரி
இசை :M.S.விஸ்வநாதன்


இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு..
திசைதொழும் துலுக்கர் என் தோழர்…
திசைதொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே ..
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
கங்கை பாயும் வங்கம் தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஷிரீசைலம் திருப்பதி கேந்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம் கடற்கரை உண்டு பாருங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ…..
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும் நோடு சுவாமி நீ நோடு..
நீ நோடு மைசூரு…
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி… ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க..
தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க..
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ…
ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ…
ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ…ஆவோ..
ஆவோ ஆவோ…ம்..ஹா ஆவோ ஆவோ
ஆவோ..ம்ம்..ஹா…ஹா… ஆவோ…
ஆவோ ஆவோ…………….
பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ.. யாஹூ.. ம்ம்..ஆஹா யாஹூ யாஹூ…
யாஹூ.. யாஹோ…
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
(எல்லாம் ஒரு தாய் கிள்ளைகள்)
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் கிள்ளைகள்
(பேசி பழகும் கிள்ளைகள்)
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்…
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்
வந்தே மாதரம்………….

உனக்கெது சொந்தம்!



குட்டிஆடு மாட்டிக்கிட்டா
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்!

தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்!

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமாட! (உனக்கு)

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா!
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோடே சொந்தம் மாறுமடா! - காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா (உனக்கு)

பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் - முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்

செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு? - நீ
துணிவிருந்தா கூறு!

ரொம்ப -
எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! - அவரு
எங்கே போனார் பாரு!

பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு - இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! (உனக்கு)

அண்ணன் காட்டிய வழியம்மா


படம் - படித்தால் மட்டும் போதுமா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - டி.எம்.சௌந்தரராஜன்


அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடமால் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது உறவாகும்
தெரியாமல் கெடுப்பது பகையாகும்

அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகள் முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தேன்
இன்னும் அவனை மறக்கவில்லை
அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

- கண்ணதாசன்

யார் தருவார் இந்த அரியாசனம்?


Song: maanikka veenaiye - பாடல்: மாணிக்க வீணையே மரகதப் பதுமையே
Movie: Mahakavi Kalidas - திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
Singers: K.B. Sundarambal - பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1966

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி

யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு

யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?

This feature is powered by Dishant.com - Home of Indian Music

அண்ணன் காட்டிய வழியம்மா



படம் - படித்தால் மட்டும் போதுமா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - டி.எம்.சௌந்தரராஜன்


அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடமால் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது உறவாகும்
தெரியாமல் கெடுப்பது பகையாகும்

அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகள் முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தேன்
இன்னும் அவனை மறக்கவில்லை
அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

- கண்ணதாசன்

படித்ததினால் அறிவு பெற்றோர்



படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
- படித்ததினால்...


கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்
குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா


வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா
வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா
சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா
- படித்ததினால்...


கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்
காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்
பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்
பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா
படித்ததினால்...


பாடல் – கவியரசர் கண்ணதாசன்
குரல் – எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்
படம் – படிக்காத மேதை

 

நாணயம் மனுஷனுக்கு அவசியம்


படம் : அமரதீபம்
பாடல் : கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

நான் கவிஞனும் இல்லை





திரைப்படம்: படித்தால் மட்டும் போதுமா
பாடலாசிரியர்:கவியரசு கண்ணதாசன்
குரல்: T.M.சௌந்தராஜன்
இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொள்ளும் ,
துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊர் என்ன சொல்லும்,

இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொள்ளும் ,
துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊர் என்ன சொல்லும்,

நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே ,
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே,
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே....

கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே....
நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே ,

நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

பாலும் பழமும்

திரைப்படம்: பாலும் பழமும்
பாடலாசிரியர்:கவியரசு கண்ணதாசன்
குரல்: சௌந்தராஜன்
இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி



பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே

உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண் மலர்வாயே

ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே

(பாலும்)

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன



பாடல்: அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
படம் -பட்டிக்காடா பட்டணமா
இசை - எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர் - டி.எம். செளந்தரராஜன்


அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தின் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் போனதடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி

எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்
அதில் ஒரு கட்டம் முடிந்ததடி
தாயார்க்குப் பின்னாலே சம்சாரம் - அது
தடம் கொஞ்சம் பிரண்டதடி
பண்பாடு காப்பதற்கு பெண் பார்த்து முடித்தேன்
என் பாடு மயங்குதடி
என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில்
அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

தேவனே என்னை பாருங்கள்


திரைப்படம்: ஞான ஒலி
பாடல்: தேவனே என்னை பாருங்கள்
பாடகர்கள்: TM. சௌந்தரராஜன்

இசை: பழையது
பாடல் ஆசிரியர்:கண்ணதாசன்

================================================================================
டெவனே என்னை பாருங்கல்
என் பாவங்கல் தம்மை வாங்கி கொல்லுங்கல்
ஆயிரம் நன்மை தீமைகல்
நாங்கை செய்கின்றொம் நீங்கல் அரிவீர் மன்னிதருல்வீர்

ஒஹ் ம்ய் லொர்ட், பர்டொன் மெ

உங்கல் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகல்
வெரு வெரு பாதையில் பொய் விட்டன
இரண்டும் சந்திட்ட பொது
பெச முடியவில்லையே

தாய் மடியிலே மழலைகல் ஊமையொ
செய் உரவிலும் நினைவுகல் மௌனமொ
காய் உடலில மனதில தெவனே
நான் அழுவத சிரிப்பத கர்தரே
மாங்கலும் சொந்தம் தெடுமே
இம்மனிடன் செய்த பாவம் என்னவொ
காவலே தந்த வெலியே
உன் பார்வையில் பில்லை பாசம் இல்லையொ

செல்வங்கல் குவிந்தது மாலிகை வந்தது
செவை புரிந்திட செவகர் ஆயிரம்
தெடி கொண்டட நன்பர்கல் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகல் குவிந்தும்
நொ பீகே ஒஃப் மிண்ட்

கெல் தருகிரென் என்றதே நீர் அன்றொ
நான் பலமுரை கெட்கிரென் தரவில்லை
என் கருனையே திரக்கும சன்னிதி
என் கர்தரே கிடைக்கும நிம்மதி

ஒஹ் லொர்ட் ப்லீசே அன்ஸ்வெர் ம்ய் ப்ரயெர்

கங்கலில் கன்னீர் இல்லையே
இந்த உல்லமும் இதை தாங்க வில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு பொ
உன் கொவிலில் வந்து செவை செய்கின்றென்

உன்னை வலைதது மக்கல் அடிதது
ஆனி அடிதது சிலுவையில் அரைந்தது
அன்று நடந்தது ஆவி துடிதது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது

நீயே உனக்கு என்றும் நிகரானவன்


பாடல்: நீயே உனக்கு என்றும் நிகரானவன்
திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1962


ஆ...

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...

வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை
கருணை கருணை கருணை கருணை
வாய் வேதம் கை நீதி விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவா

நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...

துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும்
தூபத்தில் உன் இதயம் மயங்காதையா
துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா - வெறும்
தூபத்தில் உன் இதயம் மயங்காதையா
விதி கூட உன் வடிவை நெருங்காதையா
விதி கூட உன் வடிவை நெருங்காதையா
வினை வென்ற மனம் கொண்ட இனம்
கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர்

நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)

படம் : நான் பெற்ற செல்வம்
இசை : ஜி. ராமனாதன்
பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன்
பாடலாசிரியர்: கா.மு.செரிப்

பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை


படம்: முரடன் முத்து
பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்
இசை: ரி ஜி லிங்கப்பா
பாடலாசிரியர்: கண்ணதாசன்


பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை
நல்ல உள்ளமில்லை.. என்றும்
பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணுமில்லை
இரு கண்ணுமில்லை..
(பொன்னாசை)

பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா
பொத்திவிட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா..
முல்லை பூ வேண்டுமா
கொல்லவரும் வேங்கைக்கு மான் வேண்டுமா..
புள்ளி மான் வேண்டுமா

குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா
குயிலுக்கு வான்பருந்து இணையாகுமா..
நல்ல துணையாகுமா
சொல்லக்கூடாத ஆசை நெஞ்சில் வரலாகுமா..
அது முறையாகுமா
(பொன்னாசை)

வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா
வானத்தில் வெண்நில்வு ஒன்றல்லவா..
என்றும் ஒன்றல்லவா
மானத்தில் மங்கையர்கள் மானல்லவா..
கவரி மானல்லவா
பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா
பறவை பிரிந்த பின்னே இரைதேடுமா..
பெண்மை உறவாடுமா
தட்டிப்பறித்தே சென்றாலும் அது உயிர்வாழுமா..
இன்பம் பயிராகுமா
(பொன்னாசை)

ஏன் பிறந்தாய்



திரைப்படம்: பாகப்பிரிவினை
பாடலாசிரியர்: கவிஞர் மருதகாசி
குரல்: T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா


ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
 நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை
கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

மண் வளர்த்த பொறுமை எல்லாம்
மனதில் வளர்த்தவளாய்
கண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன்
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
ஆராரோ ஆரோ ஆரிராரோ..
ஆராரோ ஆரோ ஆரிராரோ…

மணப்பறை மாடு கட்டி


திரைப்படம்: மக்களைப் பெற்ற மகராசி (1957)
பாடலாசிரியர்: கவிஞர் மருதகாசி
குரல்: T.M.சௌந்தர்ராஜன்
இசை:K.V.மகாதேவன்

உள்ளதை சொல்வேன்

Related Posts Plugin for WordPress, Blogger...