Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 5 பிப்ரவரி, 2011

படித்ததினால் அறிவு பெற்றோர்



படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
- படித்ததினால்...


கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்
குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா


வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா
வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா
சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா
- படித்ததினால்...


கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்
காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்
பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்
பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா
படித்ததினால்...


பாடல் – கவியரசர் கண்ணதாசன்
குரல் – எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்
படம் – படிக்காத மேதை

 

2 கருத்துகள்:

  1. அருமையான குரல் வளத்துடனான பாடல்..

    பதிலளிநீக்கு
  2. கொடுப்பதற்கும் *சிரிப்பதற்கும்* ...பிரிப்பதற்கும் அல்ல...

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...