Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 3 ஏப்ரல், 2010

நூறாண்டு காலம் வாழ்க

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க.. நீ வாழ்க..

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
மலடென்ற பேரும் பொய்யாக
மலடென்ற பேரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க... நீ வாழ்க..

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

படம் : பேசும் தெய்வம்
இசை : KV மகாதேவன்
பாடியவர் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி

6 கருத்துகள்:

  1. http://www.indusladies.com/forums/music-and-dance/99635-a-71.html

    பதிலளிநீக்கு
  2. http://www.freeoldtamilmp3.com/2010/08/pesum-deivam-1967.html

    பதிலளிநீக்கு
  3. இப்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

    பதிலளிநீக்கு
  4. இன்றும் மனதில் பசுமையாக உள்ளது இந்த பாடல்

    பதிலளிநீக்கு
  5. வாழ்க...வளர்க...இந்த இரு சொற்களில் இவ்வுலகையே நிறைத்து....மனதால் வாழ்த்தும் நல் மனம் வாழ்க!
    இவ் வைர வரிகளை வடித்த கரம் வாழ்க!!
    இனிய இவற்றை இன்றும் அசைபோடும் அனைவரும் வாழிய வாழியவே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கண்டவை எனது அன்பான கருத்தே!
      உங்கள் அனைவரின் அன்பு கேளுமிய ஆலோசனைக்காக எனது யூடியூப் இணையம் ....
      Anbudan Veera

      நீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...