Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 22 நவம்பர், 2009

கண் போன போக்கிலே கால் போகலாமா




கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

25 கருத்துகள்:

  1. நண்பரே மயிலை எழுத்துருவில் உள்ள தங்கள் இடுகையை யுனிகோடு முறையில் மாற்றி வெளியிடுங்களேன்..

    பதிலளிநீக்கு
  2. நண்பா தமிழ் எழுத்துக்களில் இல்லை. எழுத்துருவை சரி பார்க்கவும். :-)

    பதிலளிநீக்கு
  3. check out now my friend.. or else i have given a link above picture to download the font

    பதிலளிநீக்கு
  4. //நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்//
    I think this song was written by Vaali... plz check

    பதிலளிநீக்கு
  5. தியாகம் படத்தில் இடம் பெற்ற "நல்லவர்க்கெல்லாம்" பாடல் பிடிக்காதா உங்களுக்கு?.

    பதிலளிநீக்கு
  6. தியாகம் படத்தில் இடம் பெற்ற "நல்லவர்க்கெல்லாம்" பாடல் பிடிக்காதா உங்களுக்கு?.

    பதிலளிநீக்கு
  7. தியாகம் படத்தில் இடம் பெற்ற "நல்லவர்க்கெல்லாம்" பாடல் பிடிக்காதா உங்களுக்கு?.

    பதிலளிநீக்கு
  8. //பெயரில்லா சொன்னது…

    நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்
    I think this song was written by Vaali... plz check//

    i too have the same doubt, because the following sit says that the song wrtten by kannadasan

    http://home1.gte.net/vze2my9a/tamillyrics/tfsa/tamilunicode/songs/engaveet.htm

    but the below one says its written by vaali..

    http://www.sukravathanee.org/forum/viewtopic.php?t=7586&postdays=0&postorder=asc&start=45

    http://www.nilacharal.com/ocms/log/08310906.asp

    பதிலளிநீக்கு
  9. //Siva சொன்னது…

    தியாகம் படத்தில் இடம் பெற்ற "நல்லவர்க்கெல்லாம்" பாடல் பிடிக்காதா உங்களுக்கு?.
    17 ஜனவரி, 2010 12:53 am //
    haven't read yet siva.. I'll read it and tell you about that..

    பதிலளிநீக்கு
  10. பகிர்விற்கு நன்றி.

    தனித்தனி பதிவாக இருந்தால் இன்னும் நலம்.

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப அருமை, தனித்தனி பாடலாக போட்டு இருந்தால்,
    அனைத்து அமுதகானமும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கு மிக்க நன்றி

    Jaleela

    butterfly Surya

    SIVA

    பாத்திமா ஜொஹ்ரா

    ரோஸ்விக்

    ஆடிப்பாவை

    பதிலளிநீக்கு
  14. http://my.opera.com/muralikrishnanrb/blog/1

    http://kadagam.blogspot.com/2009/10/blog-post_17.html

    http://devakottai.blogspot.com/2006/12/5.html

    kannadasan blogs...

    பதிலளிநீக்கு
  15. கடவுளை நம்புக கடவுளைப் பற்றிய
    கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
    நடமிடும் தெய்வம் ராமனின் காதை
    நற்பா ரதத்து நன்னெறி யாவும்
    ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!

    சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
    தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
    அனைத்தும் அறிக! அறிந்தபின் னாலே
    எடுபே னாவை; எழுதுக கவிதை!
    ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
    ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!

    நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
    நாலாபுரமும் நற்கரம் விரித்து
    மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
    ஆழ அளந்து அள்ளித் தெளித்து
    ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
    மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!

    நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
    ஆண்டவன் தத்துவம் ஆயிரம் எழுதலாம்!
    கடவுள் என்பது கல்லே யானால்
    மனிதன் என்பவன் மரமே யாவான்!

    மரத்தின் பேனா மைசுரக் காது!
    மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
    பலபொருள் தேடுக; பலவகை பாடுக!
    பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
    முடிவில் காண்பது மூலப் பொருளையே!

    செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
    தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!
    நம்பிக்கைதான் நற்பொருள் வளர்க்கும்
    நம்பு கடவுளை நல்ல கவிஞன்நீ!

    பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
    சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
    அளவிற் கவிதை அதிகமா காமல்
    குறைவே யான குறைபா டெதனால்?
    நாத்திக சிறையை நம்பிக் கிடந்ததால்
    அகவே எனது அருமைத் தோழனே
    கடவுளை நம்புக! கவிஞன் நீயே!

    தலைப்பு: கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம்
    ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

    பதிலளிநீக்கு
  16. http://books.dinamalar.com/PublicBooks.aspx?id=18

    http://iniyavaikal.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

    http://kadagam.blogspot.com/2009/10/blog-post_17.html

    உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

    காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

    ஐயோ! மரணபயம் வருகிறது!

    நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

    அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

    ஆனந்தத்தில் புரளவேண்டும்

    போய்விடு!

    சுரண்டி தின்னாதே!

    சூழச்சி செய்யாதே

    என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

    ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

    உண்ணுங்கள்

    தேன் வேண்டுமா?

    பால் வேண்டுமா?

    கனி வேண்டுமா?

    தெவிட்டாது உண்ணுங்கள்

    உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

    காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

    நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

    இடைக்காலத்தை வீணாக்காதீர்!

    உண்போம்!

    புதுமை செய்வோம்!

    பெருமை கொள்வோம்!

    மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

    விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

    நாம் அனுபவிப்போம்

    வாரி வழங்குவோம்!

    பதிலளிநீக்கு
  17. பெண் வாழ்க.

    சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
    தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
    கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
    பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
    பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
    பக்கத்தில் பங்கு கொள்வோம்!
    பாதாதி கேசமும் சீரான நாயகன்
    பளிச்சென்று துணைவி வாழ்க!
    படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
    பாதியாய்த் துணைவன் வாழ்க!
    தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
    என்றெண்ணியே தலைவி வாழ்க!
    சமகால யோகமிது வெகுகால யாகமென
    சம்சாரம் இனிது வாழ்க!
    --கண்ணதாசன்
    நன்றி : http://kick-off.blogspot.com/

    பதிலளிநீக்கு
  18. http://techtamil.in/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

    the lyrics that i love..

    கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
    காசும் பணமும் சையும் இங்கே யார் தந்தது?
    எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
    எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது?
    இறைவனுக்கே இது புரியவில்லை
    மனிதரின் கொள்கை தெரியவில்லை

    ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
    ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்


    கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
    அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
    உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
    இதை உணர்ந்து கொண்டேன்
    துன்பமெல்லாம் விலகும் கண்ணா

    நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
    நதி செய்த குற்றமில்லை
    விதி செய்த குற்றமின்றி
    வேறு யாரம்மா ?

    நதியின் பிழை அன்று நறும்புனல்
    இன்மை அற்றே
    பதியின் பிழை அன்று பயந்து
    நமைப் புரந்தான்
    மதியின் பிழை அன்று மகன்பிழை
    அன்று மைந்த !
    விதியின் பிழை இதற்கு என்னை
    வெகுண்டது என்றான்.

    எண்ணங்களாலே பாலம் அமைத்து
    இரவும், பகலும் நடக்கவா?
    இத்தனை காலம் இருந்ததை எண்ணி
    இருகை கொண்டு வணங்கவா?

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
    அழுதால் கொஞ்சம் நிம்மதி
    பேச மறந்து சிலையாய் இருந்தால்
    அதுதான் தெய்வத்தின் சந்நிதி.

    "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா ?",
    "அன்பு நடமாடும் கலைக்கூடமே !",
    "மனிதன் நினைப்பதொன்று" மற்றும்
    "எங்கிருந்தோ அந்தக் குரல்"

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா

    முதலில் எமக்கெல்லாம் தொட்டிலடா
    கண்மூடினால் காலில்லாக் கட்டிலடா
    பிறந்தோம் என்பதே முகவுரையாம்
    பேசினோம் என்பதே தாய்மொழியாம்
    மறந்தோம் என்பதே நித்திரயாம்
    மரணம் என்பதே முடிவுரையாம்
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா

    சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
    தீமைகள் செய்பவன் அழுகின்றான்
    இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
    இறந்தவர் அல்லவோ திறக்கின்றார்
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா

    வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
    வந்தவரெல்லாம் நிலைப்பதில்லை
    தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
    தொடங்குவார் சிலர் அதை முடிப்பதில்லை
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா

    பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு
    ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
    புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
    புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

    தென்னை இள நீருக்குள்ளே
    தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
    தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
    தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

    முற்றும் கசந்ததென்று
    பற்றற்று வந்தவர்க்குச்
    சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
    தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

    கோழிக்குள் முட்டை வைத்து
    முட்டைக்குள் கோழி வைத்து
    வாழைக்குள் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
    ஏழையின் பேர் உலகில் இறைவன்

    வந்தது தெரியும், போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?

    பதிலளிநீக்கு
  19. வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
    ஜனனம் என்பது வரவாகும் - அதில்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா!

    இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
    இல்லை என்றால் அவன் விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதினாலே
    உயிரை மீண்டும் தருவானா?
    கூக்குரலாலே கிடைக்காது -
    இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
    கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
    போனால் போகட்டும் போடா!

    எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
    இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
    இருந்தால் அவளைத் தன்னந் தனியே
    எரியும் நெருப்பில் விடுவேனா?
    நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
    நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
    நாடகம் ஆடும் கலைஞனடா!
    போனால் போகட்டும் போடா!


    "அரக்கர் குலமெல்லாம் அன்றோடழியவில்லை
    இரக்கமிலா வடிவாக இன்னும் இருக்குதய்யா”

    மதுவை ஓர் கையில் வைத்து
    மங்கையோர் புறத்தே வைத்தால்
    எதுவரை உலகம் போகும்
    எங்கெங்கோ போகும், நானும்
    அதுவரை போவேன்.

    காதலை, மதுவை, இன்பக்
    காட்சியை வென்றேனென்று
    ஓதுவோர் எவரும் இந்த
    உலகிற்குத் தேவையில்லை

    மானிடரைப் பாடிஅவர்
    மாறியதும் ஏசுவதென்
    வாடிக்கை யான பதிகம்
    மலையளவு தூக்கிஉடன்
    வலிக்கும் வரை தாக்குவதில்
    மனிதரில் நான் தெய்வ மிருகம்

    நானிடறி வீழ்ந்த இடம்
    நாலா யிரமதிலும்
    நான்போட்ட முட்கள் பதியும்
    நடைபாதை வணிகனென
    நான்கூறி விற்ற பொருள்
    நல்லபொருள் இல்லை அதிகம்

    "எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்?
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது"

    "மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல!
    மாற்றம் எனது மானிடத் தத்துவம்!
    மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்."

    பதிலளிநீக்கு
  20. கோடிக் கதிபனெனக்
    குறையாது வந்தாலும்
    நாட்டுத் தலைவனென
    நல்வாழ்வு பெற்றாலும்
    கேட்ட பொருளெல்லாம்
    கிடைத்தாலும், அவன் வீட்டு
    மாட்டுக்கும் கூட
    மரியாதை கிடைத்தாலும்
    பஞ்சணைகள் இருந்தாலும்
    பால்பழங்கள் உண்டாலும்
    சொத்துள்ள காரணத்தால்
    தூக்கம் பிடிக்காது!

    அவனை எழுப்பாதீர்
    அப்படியே தூங்கட்டும்!

    பூப்போலத் தூங்குகிறான்
    பூமியிலே உள்ளதெல்லாம்
    பார்க்காமல் தூங்குகிறான்
    பாவிகளை இன்றுவரை
    சேராமல் தூங்குகிறான்;
    தெய்வத்தின் காதினிலே
    ரகசியங்கள் பேசுகிறான்;
    "லாலிலா" பாடுகிறான்!
    வெள்ளை மலர்முகத்தை
    வெள்ளிநிலாப் பெட்டகத்தைப்
    பிள்ளைக் கனியமுதைப்
    பேதையீர் எழுப்பாதீர்!


    அவனை எழுப்பாதீர்
    அப்படியே தூங்கட்டும்!

    "கறையுடைய நெஞ்சினரும்
    திறனுடைய கவிஞர்களைக்
    காலால் உதைக்கும் நேரம்
    கடல் பெருகி மழை பெருகிக்
    காற்றுப்புய லாகவரும்
    கலியுகம் முடியும் நேரம்!"

    கடவுள் செய்த பாவம் - இங்கு
    காணும் துன்பம் யாவும் என்ன
    மனமோ - என்ன குணமோ - அந்த
    மனிதன் கொண்ட கோலம்

    எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
    எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
    இயற்கை அறிவை மடமையென்னும்
    பனித்திரையாலே மூடுகிறான்.

    பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
    பெருமை என்று பேசுகிறான் - பெண்
    பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
    மறுநாள் அவனே ஏசுகிறான்.

    நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
    நன்றியெனுங் குணம் நிறைந்திருக்கும்,
    நரியாய் அவனே உருவெடுத்திருந்தாலும்
    தந்திரமாவது தெரிந்திருக்கும்.

    காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
    ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்,
    காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
    கடுகளவாவது பயனிருக்கும்.

    ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
    அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த
    ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
    அவனே வெளியில் விட்டு விட்டான்.

    எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
    வேறு பட்டு நின்றானடி.

    தேரோடும் வாழ்வில் என்று
    ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி - கண்ணில்
    நீரோட விட்டானடி.

    கையளவு உள்ளம் வைத்து
    கடல் போல் ஆசை வைத்து
    விளையாடச் சொன்னானடி - என்னை
    விளையாடச் சொன்னானடி - அவனே
    விளையாடி விட்டானடி.

    காலங்கள் உள்ளவரை
    கன்னியர்கள் யார்க்கும் இந்தக்
    காதல் வர வேண்டாமடி - எந்தன்
    கோலம் வர வேண்டாமடி.

    வாழ்வில் துன்பம் வரவு
    சுகம் செலவு
    இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை இங்கே
    யார் காணுவார்?

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும் உன்
    நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்

    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதருக்கு ஒளவை சொன்னது
    அது ஒளவை சொன்னது
    அதில் அர்த்தமுள்ளது

    சொன்னாலும் வெட்கமடா! சொல்லா விட்டால் துக்கமடா!
    வெட்கமுமில்லாமல் துக்கமுமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா!

    பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
    மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழுகிறேன்

    பாய்விரித்துப் படுப்பவரும் வாய்திறந்து தூங்குகிறார்
    பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதியில்லை

    கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
    குத்திவிட்டுப் புத்தனைப்போல் சத்தியமாய் வாழுதடா

    இல்லாத மனிதருக்கு இல்லையெனும் தொல்லையடா
    உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா
    அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
    உன் வாழ்வை நினைக்கையிலே என் மனசு தவிக்குதடா

    வண்ணமுத்து மண்டபமும் வைரமணிப் பஞ்சணையும்
    உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று

    கைகள் வீசும் கருணை நெஞ்சில்
    மறைவதே இல்லை - துன்பம்
    புரிவதே இல்லை - கண்ணில்
    தெய்வம் வேறு பிள்ளை வேறாய்த்
    தெரிவதே இல்லை - பாசம்
    அலைவதே இல்லை

    ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
    கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வ மொழி

    பதிலளிநீக்கு
  21. ஓர் கையில் மதுவும் ஓர் கையில் மங்கையரும்
    சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால் தான்
    நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும் இல்லையெனில்
    ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் கேட்பான்

    காதலெனும் போதையுற்று
    மாதர்சுக வாதைபட்டுக்
    காமரசம் கொண்டதடி மஞ்சம் - இன்று
    ஞானரசம் தேடுதடி நெஞ்சம்!

    மேனி பட்ட பாடும் - பல
    ராணி பட்ட பாடும் - என்னை
    ஞானி எனச் செய்ததடி இன்று - எமன்
    நாளை வந்த போதும் அது நன்று!

    ஆடும் வரை ஆடி உடல்
    ஆடுகின்ற காலம் வந்து
    தேடுதடி தேவன் அவன் வீட்டை - அவன்
    தேடவில்லை இன்னும் எந்தன் ஏட்டை!

    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
    நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்
    நினைவு தராமல் நீ இருந்தால்
    கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்!
    நூலிலை மீதொரு மேகலையாட
    மாலைக்கனிகள் ஆசையில் ஆட
    ஏலப்பூங்குழல் இன்னிசை பாட
    எண்ணம் யாவும் எங்கோ ஓட
    காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
    கண்கள் இரண்டில் நிம்மதி ஏது?

    மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே - மலை
    மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
    பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா? - இங்கே
    பார்வையோடு பார்வை பேசத் தூது வேண்டுமா?

    கண்ணிலே நீர் எதற்கு?
    காலமெல்லாம் அழுவதற்கு

    நெஞ்சிலே நினைவெதெற்கு?
    வஞ்சகரை மறப்பதற்கு

    இன்பமெனும் மொழி எதற்கு?
    செல்வத்தில் மிதப்பதற்கு

    துன்பமெனும் சொல்லெதெற்கு?
    உள்ளமென்ப துள்ளவர்க்கு

    கையிலே வளைவெதெற்கு?
    காதலியை அணைப்பதற்கு

    காலிலே நடையெதெற்கு?
    காதலித்துப் பிரிவதற்கு

    பாசமென்ற சொல்லெதெற்கு?
    பார்த்திருந்து துடிப்பதற்கு

    ஆசை கொண்ட வாழ்வெதெற்கு?
    அன்றாடம் சாவதற்கு

    பூவிலே தேனெதெற்கு?
    வண்டு வந்து சுவைப்பதற்கு

    வண்டுக்குச் சிறகெதெற்கு?
    உண்ட பின்பு பறப்பதற்கு

    உறவுகள் தொடர்கதை ... உணர்வுகள் சிறுகதை ..
    ஒருகதை என்றும் முடியலாம்
    முடிவிலும் ஒன்று தொடரலாம்
    இனியெல்லாம் சுகமே

    உன்னெஞ்சிலே பாரம்
    உனக்காகவே நானும்
    சுமைதாங்கியாய்த் தாங்குவேன்
    உன் கண்களின் ஓரம்
    எதற்காகவோ ஈரம்
    கண்ணீரை நான் மாற்றுவேன்
    வேதனை தீரலாம் .. வெறும்பனி விலகலாம் ..
    வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

    வாழ்வென்பதோ கீதம்
    வளர்கின்றதோ நாணம்
    நாள் ஒன்றிலும் ஆனந்தம்
    நீ கண்டதோ துன்பம்
    இனி வாழ்வெல்லாம் இன்பம்
    சுகராகமே ஆரம்பம்
    நதியிலே புதுப்புனல் .. கடலிலே கலந்தது
    நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

    இங்கே தெய்வம் பாதி
    மிருகம் பாதி மனிதனானதடா - அதில்
    உள்ளம் பாதி கள்ளம் பாதி
    உருவம் ஆனதடா

    உள்ளத்தில் அரியணை அமைத்து
    உட்கார்ந்திருக்கும் கவிமகனே
    உன்னை நானறிவேன் அதிலூறிய
    உணர்வுகளின் கீறல்களையும் அறிவேன்

    கண்ணான தாசனே உனது இதயம்
    கண்ணாடி போல் நொறுங்கியதும்
    காயங்கள் தாம்பட்ட துன்பங்கள் தனைக்
    கவியாகக் கூறியதும் மனதிலாடுகின்றன

    அன்னமிட்ட கைகளதை அறியாமலோ
    அரிந்திட்ட சொந்தங்கள் உனை மட்டுமல்ல
    அடியேனைச் சுற்றியும் தான் கண்டேன்
    ஆண்டவனறிவான் ஆயிரம் கதைகளய்யா

    உன் பெருமை சொல்லும் போது, புரியுது
    உன்னெஞ்சம் பட்ட துயரங்கள்
    உலகத்தில் அழும் உள்ளங்களை ஆற்றுது
    உன் மனமுதித்த அமுதான பாடல்கள்

    http://home.eegarai.com/-f25/-t804-80.htm

    பதிலளிநீக்கு
  22. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
    என் மீது மோதுதம்மா
    பூ வாசம் மேடை போடுதம்மா
    பெண்போல ஜாடை பேசுதம்மா
    அம்மம்மா ஆனந்தம்

    வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
    மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
    ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
    ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
    காடுகள் மலைகள் தேவன் கலைகள்

    செந்தாழ்ம்பூவில்

    அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
    ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
    பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
    பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
    மலையின் காட்சி இறைவன் ஆட்சி

    செந்தாழம்பூவில்


    இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
    இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
    ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
    உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
    மறவேன் மறவேன் அற்புத காட்சி

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...