சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா..
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா .
குள்ளநரிக் கூட்டம் ஒன்று குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை
இடரவைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
பாடல்: சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
திரைப்படம்: நீலமலைத் திருடன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1957
நடிப்பு: ரஞ்சன், அஞ்சலிதேவி, ஈ.வி.சரோஜா
மனம் தளரும்போது வீருகொண்டு சீர வைக்கும் பாடல்
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள்.
நீக்கு👆எந்த பயிற்சியும் இன்றி பலமுறை பொது காற்று வெளியில் அந்த 70,80 -ளில் செவிக்கு வந்தடைந்த வரிகள்.
பதிலளிநீக்குஅந்த காலத்து இயற்கை,பாரம்பரியத்துடன் இணைந்து சமூகத்தால் தருவிக்கப்பட்ட மோட்டிவேஷன் வரிகள்.
எக்காலத்திலும் அழியாத பாடல்!
பதிலளிநீக்குஓல்ட் ஈஸ் கோல்ட்!