Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

திங்கள், 7 பிப்ரவரி, 2011

வாழ்க்கை ஒரு போர்க்களம்




ஆண்: அலோ அலோ மைக்டெஸ்ட்டிங்
 அலோ ஒன் டூ த்ரி அலோ

ஆண்: யோ என்னய்யா கொர கொரன்னு கேக்குது
 எதையாவது கொண்டாந்து கைல குடுத்துவிட்டுறீங்க ஒங்கபாட்ல

ஆண்: வேட்டைக்காரன் பார்ட்டி நடத்தும்
 அய்யூப் நினைவு கோப்பை மகாநாட்டிற்கு
 வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும்
 விழா கமிட்டியார் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்

ஆண்: வாழ்க்கை ஒரு போர்க்களம்
 வேட்டையாடிப் பார்க்கணும்
 போராடி வெல்லடா
 போட்டிப் போட்டுக்கொள்ளடா

ஆண்: அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம்
 குருதி மழையில் பூரிப்போம்
 பட்டாக்கத்தி பாய்த்திடுங்கள்
 போ போ போ ரணகள நொடிகள்
 எதிலுமே தோல்விக் கூடாதடா
 எமனையும் வெற்றி நீக்கொல்லடா
 சாதனையிலே வேதனைகள் முடியும்
 வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்
 வெல்வோமே.... வீழாமல்....
 வெல்வோமே.... வீழாமல்....
 போராடி வா இது ஆடுகளம் வா
 (இசை...)

ஆண்: கூண்டோடு கருவறுப்பேன்
 போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன்
 பகை முற்றுகையில்
 என் எதிரினில் எதிரிகள் பொடிபடவே
 இனி ஏதும் இல்லை வழி ஒரே அழித்திடவே
 என் வீரம் உன்னை வேரறுத்து கொல்லிவைக்குமே
 தலைகள் சிதறும்
 இது பகைவனை அறுத்திடும் அறுவடை
 சினத்தால் செருக்கை துடை
 திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே
 பறந்தோடிடும் ஆட்டமே
 அது சரித்திரம் படைத்திடும் கரும்படை
 எழுந்தால் நொறுங்கும் தடை
 உயிர்விட்டும் நாம் காப்போம் மானமே
 கைக்கூடிடும் காலமே

ஆண்: ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே

ஆண்: இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக
 உங்கள் அனைவருக்கும் பேட்டைக்காரன் பார்ட்டி சார்பாக
 எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத்
 தெரிவித்துக் கொள்கிறோம்

ஆண்: போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்
 போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்

ஆண்: இவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில்
 புதிய ஒளி பரவும் கவலைப் பறந்திடுமே
 வென்றேன் இப்போதே
 விலகிடு நீ இனிமேல் என்னைத் தொடாதே கொய்யால
 ஒரு கையில் கரி சோறு
 மறு கையில் தரமான பீரு
 கரை ஓரம் தனி வீடு கதைப்பேசுமே என் ஜோடியோடு
 நான் ஆணையிட மாறிடுமே அடடா
 நடைப்பாதையில் மலர்த் தூவிடடா
 இணை யார்எனப் புகழ் பாடிடடா
 ஹ ஹ கைக்கொள்ளாது காசடா
 வரலாற்றில் வைத்திடுவோம் தடமே
 தயங்காமல் எதையும் தருவோம் நாமே
 அவளுடன் என் காதலைப் பாரடா
 என்னை நோக்கிப் பெண் சொந்தம் மீண்டும் போதுமடா
 போதுமடா போதுமடா
 போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...