Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 5 நவம்பர், 2009

தேடிச் சோறுநிதந் தின்று


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவைநேரே இன்றெனக்குத் தருவாய்
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!


வேண்டுமா? பாரதியின் பாடல்கள் உங்களுக்காக.. இங்கே!...

4 கருத்துகள்:

  1. an artical about barathi .. http://malarvanam.blogspot.com/2009/12/blog-post_10.html

    பதிலளிநீக்கு
  2. உங்களின் பகிர்வுக்கு மிகவும் நன்றி தோழரே...பாரதியின் சிந்து நதியின் இசை..அப்படி என்று தொடங்குமே பாடல் அது உங்களிடம் இருந்தால் கொஞ்சம் என் மினஞ்சல் முகவரிக்கு அனுப்புங்களேன் நன்றி...மற்றும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கமலேஷ், தங்கள் கேள்விக்கான விடை இங்கே உள்ளது..
    http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi05.asp

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு மிக்க நன்றி

    கமலேஷ்

    sarvan

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...