Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்






Song: eththanai kaalam thaan - பாடல்: எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்
Movie: Malaikallan - திரைப்படம்: மலைக் கள்ளன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Thanjavur Ramaiya das - இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
Music: S.M. Subbaiah Naidu - இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
Year: - ஆண்டு: 1954 

  ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்
இன்னும் எத்தனை காலந்தான் இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...