Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

காசைவிட எது பெரிது?

தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்
தான்போய்க் குடியி ருந்தால்
தட்டுகிர கை அங்கு தாசிஎன் றறியுமா
சம்சாரி என்றறியுமா?
நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்
நீசரென் றேயழைப் பார்;
நிகழ்கால ந்ட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்
நெருங்குமுன அறிய வேண்டும்!
காசு பெரிதல்லநல் நண்பர்பெரி தாமென்று
கருத்தினில் இருத்து வாயே!
கனிவுடைய சிறுகூடற்பட்டியில் வதிகின்ற
கன்னிமலை யரசி துணையே!"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...