Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

தெய்வம் பாதி - மிருகம் பாதி

இங்கே தெய்வம் பாதி - மிருகம் பாதி
மனிதன் ஆனதடா - அதிலே
உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா!

ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
காசு இல்லாத வேளையிலே
கடவுளுக்கே பூசையடா!

தந்திரத்தில் நரிகளடா
தன்னலத்தில் புலிகளடா
அந்தரத்தில் நிற்கையிலே
மந்திரத்திலே ஆசையடா!

இங்கே கூட்டமாக வாழச் சொன்னால்
ஓட்டை சொல்லுமடா - எதிலும்
ஓட்டை சொல்லுமடா - நாட்டில்
வாட்டம் வந்து சேரும்போது
கூட்டம் கூடுமடா - நன்றாய்ப்
பாட்டுப் பாடுமடா!

முகத்தில் பாதி வாய் இருக்கும்
முழு நீளம் நாக்கு இருக்கும்
முதுகிலே கண் இருக்கும்
மூளையிலே மண் இருக்கும்!

மனதிலே பேய் இருக்கும்
மறையாத நோய் இருக்கும்
வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால்மட்டும் இல்லையடா!


படம் - சித்தி - வருடம் 1966

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...