Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

எல்லோரும் கொண்டாடுவோம்



அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
அஜா ஹிலாஹி இல்லல்லா
அஜா ஹிலாஹி இல்லல்லா

எல்லோரும் கொண்டாடுவோம்;
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி(எல்லோரும்)

கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்!(எல்லோரும்)

நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்
ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
கறுப்புமில்லே வெளுப்புமில்லே, கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லே, கடவுளில் பேதமில்லே
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க்கூடுவோம்(எல்லோரும்)

ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்

இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம (எல்லோரும்)


படம்: பாவ மன்னிப்பு (வருடம் 1961)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...