Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

கண்ணிழந்த மனிதன்

பெண்:
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்... பாடல் இசைத்தார்

ஆண்:
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே
பாட்டை முடித்தார்
பாட்டை முடித்தார்

பெண்:
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
சாய்ந்து விட்ட மரத்தினிலே
கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின்
சிறகை ஒடித்தார்

ஆண்::
பண்ணறிந்து மீட்டுமுன்னே
யாழைப் பறித்தார்
யாழைப் பறித்தார்

பெண்:
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
ராஜா: கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்...காட்டி மறைத்தார்

பெண்:
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்

ஆண்:
முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு தெளிவுமில்லையே

பெண்:
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்... பாடல் இசைத்தார்"


திரைப் படம்: ஆடிப் பெருக்கு - வருடம் 1962
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரு. ஏ.எம்.ராஜா
பாடியவர்கள்: திரு. ஏ.எம்.ராஜா - திரு.பி..சுசீலா
நடிகர்கள்: திரு.ஜெமினி - திருமதி. சரோஜா தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...