Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

எங்கே எங்கே மனிதன் எங்கே


எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடையில் மிருகம் இங்கே
ஓனாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே
வரிகளால் அந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

ஜனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய்
செய்தானே மனிதன் செய்தானே

கழுகை பிழந்து காணும் போது
வானம் இருண்டிட கண்டேன்
நான் உறவை திரந்து காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
என் உடலை தொட்டாய் நான் மனிதன் ஆனேன்
என் உயிரை தொட்டால் நான் கடவுள் ஆவேன்

இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாங்கும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூலாங்கற்கள்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்.


Movie Name:அசல்
Song Name:எங்கே எங்கே மனிதன் எங்கே
Singer:.S.P.பாலசுப்ரமணியம்
Music Director;பரத்வாஜ்
Lyrics:வைரமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...