Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

நானொரு சிந்து காவடிச்சிந்து



நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்
வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்

பசுகன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை
என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
கண்டுபிடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...