Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

வாராய் என் தோழி வாராயோ



நான் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கறேன்
அதுல ஆனந்த கண்ணீர தான் நான் எப்பவும் பாக்கனும்

அது என் கடமை ராஜா.. நீ கவலைப்படாத...

நன்றி ஆனந்தா மிக்க நன்றி !!!
அம்மா.. மஞ்சள் குங்குமத்தோட நீ நீடூழி வாழனும் தாயே

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளை கண்டு மகிழாதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

தனியாக காண வருவார்
இவள் தளிர் போலே தாவி அணைவாள்
கண் போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

படம் : பாச மலர்
இசை : MS விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : LR ஈஸ்வரி, MS ராஜேஸ்வரி



This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...