நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்(2)
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன் (2)
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
???? எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்
???? வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!