Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

வாழ்ந்து பார்க்கவேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும்


வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்!

நாடு காக்க வேண்டும் முடிந்தால்
நன்மை செய்ய வேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால்
கிள்ளி வீச வேண்டும்!

தமிழும் வாழ வேண்டும் மனிதன்
தரமும் வாழ வேண்டும்
அமைதி என்றும் வேண்டும் ஆசை
அளவு காண வேண்டும்!

காற்று வீச வேண்டும் பெண்கள்
காதல் பேச வேண்டும்
காதல் பேசும் பெண்கள் வாழ்வில்
கவிதையாக வேண்டும்!

மானங்காக்க வேண்டும் பெண்களை
மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் இருவர்
ஒருவராக வேண்டும்! (வாழ்ந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...