Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

பொன்னை விரும்பும் பூமியிலே


பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலயும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே (2)
தாய்மை எனக்கே தந்தவர் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே


பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் (2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்

அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே


ஆல மரத்தின் விழுதினைப் போலே
அனைத்து நிற்கும் உறவு தந்தாயே (2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே

2 கருத்துகள்:

  1. புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே

    பதிலளிநீக்கு
  2. புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...