நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”
பாலைவனம் என்ற போதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்
வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
Song: naatu adhai naatu - பாடல்: நாடு அதை நாடு
Movie: Nadodi - திரைப்படம்: நாடோடி
Singers: T.M. Soundararajan, P. Suseela - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1966
This feature is powered by Dishant.com - Home of Indian Music |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!