Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
மானிட ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை

Song: oru koppaiyile en kudiyiruppu - பாடல்: பஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
Movie: Ratha thilagam - திரைப்படம்: ரத்தத் திலகம்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1963


This feature is powered by Dishant.com - Home of Indian Music

3 கருத்துகள்:

  1. Murugadoss Balasubramanian 7 Jan 2013
    முதன் முதலில் இந்த பாடலை கேட்கும்/பார்க்கும் அனைவருக்கும்..சட்டென்று ஞாபகம் வருவது...கண்ணதாசனின் குடி பழக்கம். ஆனால் இந்த பாடல் அர்த்தம் அதற்கும் மேலானது... கண்ணதாசன் அவருக்கென்று அவரே கால சுவட்டில் பதிந்து சென்றது. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - இங்க் பாட்டில்
    ஒரு கோலமயில் என் துனையிருப்பு - பேனா
    இசைபாடலிலே என் உயிர்துடிப்பு - கவிதையின் மேல் உள்ள பற்று
    நான் பார்ப்பதேல்லாம் அழகின் சிரிப்பு - இதற்கு மேல் பாடலை நீங்களே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்த்தம் சரியானதே இது 11 நூற்றாண்டில் வாழ்ந்த உமர் கய்யாமின் வரிகள்... கோப்பை மையும், எழுது கோலாக மயில் இறகும் அவரிடம் இருந்ததை குறிப்பிட்டு எழுதிய கவிதை வரிகள்... கண்ணதாசன் அதை தான் பயண்படுத்தினார்

      நீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...