Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

அந்தி மழை பொழிகிறது



அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
எத்தனை இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீல் நிற்கும்போதே வேர்க்கின்றது

நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்கலிள்
சந்தனமாய் அணை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய முத்திரமே..
ரகசிய ராத்திரி புத்தகமே....

பாடல்: அந்தி மழை பொழிகிறது
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்த
ராஜ பார்வை, இளையராஜு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...